தமிழ்நாடு

tamil nadu

ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை தாக்கல்

By

Published : Nov 21, 2022, 5:52 PM IST

ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை நிலை குறித்த விவரங்களை சீலிடப்பட்ட கவரில் அறிக்கையாக சிறப்பு புலனாய்வுக்குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

ராமஜெயம் கொலை வழக்கு
ராமஜெயம் கொலை வழக்கு

சென்னை: தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29இல் நடைபயிற்சி சென்றபோது கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை செய்தும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படாததால் மாநில போலீசாரே வழக்கை விசாரிக்க உத்தரவிடக்கோரி ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்தது.

பின்னர் வழக்கை விசாரிக்க தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐயைச் சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன் இன்று (நவ.21) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஆஜரான காவல் துறை தரப்பு வழக்கறிஞர், விசாரணை நிலை குறித்த விவரங்களை சீலிடப்பட்ட கவரில் அறிக்கையாகத் தாக்கல் செய்தார். விசாரணைத் தொடர்ந்து நடைபெற்று வருதாகவும், காவல் துறை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கு விசாரணை டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வரும் 26ஆம் தேதி முதல் நீட் பயிற்சி

ABOUT THE AUTHOR

...view details