தமிழ்நாடு

tamil nadu

தொடரும் மழை...கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

By

Published : Nov 12, 2022, 6:47 AM IST

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து வரும் நிலையில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை : வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதியில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. சென்னையில் நேற்று இரவில் இருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இதனையடுத்து கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, வேலூர், நீலகிரி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருச்சி, ஆகிய மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பெரம்பலூர், சேலம், கரூர், தஞ்சை, திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. .

காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து இருப்பதாகவும், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 19 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பக்தி பாடல்கள் கோயிலில் வழிபட்ட ஜப்பான் நடிகை...

ABOUT THE AUTHOR

...view details