தமிழ்நாடு

tamil nadu

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.91 லட்சம் நூதன மோசடி

By

Published : Feb 18, 2023, 6:31 PM IST

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.91 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.91 லட்சம் நூதன மோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.91 லட்சம் நூதன மோசடி

சென்னை:கடலூர் மாவட்டம் மணியம் ஆதூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சைலேஷ் (31). இவர் பேஸ்புக்கில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்து ஆவடி பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தை அணுகினார். அங்கு அவருக்கு ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த சையத் மின் ஹாஜீதீன் உள்ளிட்ட சிலர் அறிமுகமாகி உள்ளனர்.

அவர்கள் சைலேஷிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 லட்டம் பணம் கேட்டுள்ளனர். அதன்படி சைலேஷ் கடந்த ஆண்டு ரூ. 3 லட்சத்தை கொடுத்தார். ஆனால், சொன்னபடி வெளிநாட்டில் வேலை வாங்கி தராததால் சைலேஷ், நேரில் சென்று தான் கொடுத்த பணத்தை தரும்படி கேட்டார்.

அவர்கள் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதால் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்ற பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். ஆவடி போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் கீதா இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தார்.

இந்த மோசடி தொடர்பாக சையத் மின் ஹாஜீதீனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் இவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு மேற்படி நிறுவனத்தை நடத்தியதும், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.91 லட்சத்திற்கும் மேல் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. கைதான சையத் மின்ஹாஜீதீனை போலீசார் பூந்தமல்லி கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:பக்கத்து வீட்டு பெண் பாலியல் வன்கொடுமை; பொறியியல் பட்டதாரியின் நாடகம் அம்பலமானது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details