தமிழ்நாடு

tamil nadu

'திமுக கோவை கோட்டையை முற்றிலுமாக கைப்பற்றிவிட்டது!'

By

Published : Feb 18, 2022, 10:47 PM IST

கடந்த முறை 9 மாவட்டங்களில் எந்த அளவுக்கு நேர்மையாகவும், நியாயமாகவும் ஊராட்சிக்கு உட்பட்ட தேர்தல் நடைபெற்றதோ அது போலவே நாளைய தேர்தலும் நடைபெறும். பழனிசாமி அவர்களைப் பார்த்து நான் கேட்கிறேன், கோவையில் அவர்கள் பயப்பட யார் காரணம்? கோவையை அதிமுக அவர்களது கோட்டை என நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், எங்களால் கோவையில் அதிமுக கோட்டை தகர்த்தப்பட்டுள்ளது. கோவை மட்டும் அல்ல, அனைத்து இடங்களிலும் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெரும். எந்த தேர்தலில் வேண்டுமானாலும் என்ன வேணாலும் பண்ணலாம். ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் தில்லுமுல்லு செய்யமுடியாது! திமுக கோவை கோட்டையைக் கைப்பற்றிவிட்டது" என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

திமுக கோவை கோட்டையை முற்றிலுமாக கைப்பற்றிவிட்டது
திமுக கோவை கோட்டையை முற்றிலுமாக கைப்பற்றிவிட்டது

சென்னை: தமிழ்நாடு உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை (பிப்ரவரி 19) நடைபெறும் நிலையில் தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெளி மாவட்ட திமுகவினரை வெளியேற்ற வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக-வினரைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தினர் ஈடுபட்டனர்.

அப்போது திமுகவினர், காவல் துறை, மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் வாக்குப்பதிவின்போது துணை ராணுவப்படை பாதுகாப்பு வேண்டும் என்றும், தேர்தல் பார்வையாளரை மாற்றக்கோரியும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

அவர்களுடன் காவல் துறையினர் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடப்படவில்லை. இதனால், காவல் துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

கோவையில் கலவரம் ஏற்படுத்த சதி

இதனையடுத்து, கோவையில் வாக்குப்பதிவை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது என்றும் கோவையில் கலவரம் ஏற்படுத்த சதி நடக்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

முதலமைச்சர் ஸ்டாலின்

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது பக்கத்தில், "கோவை மாநகராட்சி தேர்தலில் வன்முறையை ஏற்படுத்தி, மக்களை அச்சுறுத்தி ஜனநாயக முறைப்படி வாக்களிக்காமல் தடுப்பதற்காக திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமித்து அவர் இந்த பணியில் ஈடுபட்டிருக்கின்றார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திமுகவின் கைப்பாவையாகவும், ஏவல் துறையாகவும்

குண்டர்களையும்,ரவுடிகளையும் வெளியேற்ற வலியுறுத்தி முன்னாள் அமைச்சர், அதிமுக சட்டப்பேரவை கொறடா முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அஇஅதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையர் இடத்திலும் புகார் அளித்தார்கள் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாநில தேர்தல் ஆணையம் திமுகவின் கைப்பாவையாகவும், மாவட்ட காவல்துறை ஏவல் துறையாகவும் செயல்படுவதை கண்டிப்பதுடன், தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என்று அந்தப் பதிவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அண்ணா அறிவாலயம்

உண்மையை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க

இதனிடையே, எடப்பாடி பழனிச்சாமியின் புகாரை அடுத்து அதற்குப் பதிலளிக்கும் வகையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி பேட்டி பார்க்கிற போது, அண்மைக்காலமாகத் தளபதி முதலமைச்சர் ஸ்டாலின். பழனிசாமிக்குக் கொடுத்த பட்டத்திற்குப் பொருத்தமானவர் என நிரூபித்து இருக்கிறார் என்பது தெரிகிறது. அவர் பேட்டியைத் தொடர்ந்து, உண்மையை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இந்த பேட்டியை உங்களுக்கு அளிக்கிறேன்.

கோவை கோட்டை

அது போலவே நாளைய தேர்தலும் நடைபெறும்

கடந்த முறை 9 மாவட்டங்களில் எந்த அளவுக்கு நேர்மையாகவும், நியாயமாகவும் ஊராட்சிக்கு உட்பட்ட தேர்தல் நடைபெற்றதோ அது போலவே நாளைய தேர்தலும் நடைபெறும். பழனிசாமி அவர்களைப் பார்த்து நான் கேட்கிறேன், கோவையில் அவர்கள் பயப்பட யார் காரணம்?

ஆர்எஸ் பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேட்டி

கோவையை அதிமுக அவர்களது கோட்டை என நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், எங்களால் கோவையில் அதிமுக கோட்டை தகர்த்தப்பட்டுள்ளது. திட்டமிட்டு அதிமுக பொய் பிரச்சாரம் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.

மோடி அரசே ஆச்சரியப்படும் ஸ்டாலின் ஆட்சி

ஸ்டாலின் ஆட்சியைக் கண்டு மோடி அரசே ஆச்சரியப்படும் அளவிற்கு மக்கள் பேராதரவு, பெருகி விட்டது என்பதை உணர்ந்த மோடி அரசு, தமிழ்நாட்டில் செயல்படுத்தி வரும் திட்டங்களை மையத்தில் வைத்து உபி தேர்தலில் முதியோர்களுக்கு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைச் செய்து முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறார் ஸ்டாலின்.

முதலமைச்சர் ஸ்டாலின்

கோவையில் அதிமுக கோட்டை தகர்த்தப்பட்டுள்ளது

கோவை மட்டும் அல்ல, அனைத்து இடங்களிலும் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெரும். இந்த 8 மாத காலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் எழுந்தது, அதே 8 மாத காலத்தில் நாங்கள் ஊழல் செய்துள்ளோம் என்று குறிப்பிட்டுக் காட்ட எந்த முன்னாள் அமைச்சருக்காவது தெம்பு இருக்கிறதா? எந்த தேர்தலில் வேண்டுமானாலும் என்ன வேணாலும் பண்ணலாம். ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் தில்லுமுல்லு செய்யமுடியாது! திமுக கோவை கோட்டையைக் கைப்பற்றிவிட்டது" என்று அவர் பேசினார்.

இதையும் படிங்க: 'தோல்வி பயம்; ரவுடிகள், சமூகவிரோதிகளை இறக்குமதிசெய்த திமுக!'

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details