தமிழ்நாடு

tamil nadu

TNPSC: தலைமைச் செயலகப் பணிக்கான தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு!

By

Published : Dec 12, 2022, 1:21 PM IST

தலைமைச் செயலகப் பணிக்கான எழுத்து தேர்விற்கான ஹால்டிக்கெட்டினை இணையப்பக்கத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகப் பணிக்கான எழுத்து தேர்விற்கு ஹால்டிக்கெட் வெளியீடு
தலைமைச் செயலகப் பணிக்கான எழுத்து தேர்விற்கு ஹால்டிக்கெட் வெளியீடு

சென்னை:தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியில் அடங்கிய உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்விற்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி குருப் ’5 ஏ’ வில் அடங்கிய உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு (விரித்துரைக்கும் வகை) வருகின்ற டிச.18 காலை மற்றும் மாலையில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியில் அடங்கிய உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்விற்கான ஹால்டிக்கெட் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in- என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் வேலைவாய்ப்பு..!

ABOUT THE AUTHOR

...view details