தமிழ்நாடு

tamil nadu

உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்ச்சிப் பட்டியல் வெளியீடு

By

Published : Oct 28, 2020, 7:44 PM IST

சென்னை: உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுசெய்யப்பட்டவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

chennai
chennai

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறப்பு ஆசிரியர் பணியிடங்களில் உடற்கல்வி ஆசிரியர்களை தேர்வுசெய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவர்களுக்கான எழுத்துத் தேர்வு 2017ஆம் ஆண்டு செப்.23ஆம் தேதி நடத்தப்பட்டது.

எழுத்துத் தேர்வு முடிவுகள் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, தேர்ச்சிப் பெற்றவர்களின் பட்டியல் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதனை எதிர்த்து சிலர் நீதிமன்றம் சென்றனர், நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தற்போது திருத்தப்பட்ட தேர்வுபெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி பள்ளிக் கல்வித் துறையில் பணி நியமனம் வழங்கப்படும். தேர்ச்சிபெற்றவர்கள் பெற்ற மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்களையும், பெறாமல் உள்ளவர்களுக்கான காரணங்களும் தெரிவிக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து சமாஜ்வாதிக்குத் தாவிய 5 எம்எல்ஏக்கள்!

ABOUT THE AUTHOR

...view details