தமிழ்நாடு

tamil nadu

பொதுமக்கள் தடுப்பூசி போட தயங்குகிறார்களா? விழிப்புணர்வு ஏற்படுத்தும் மக்கள் நல்வாழ்வுத்துறை!

By

Published : Apr 13, 2021, 7:56 PM IST

Updated : Apr 13, 2021, 10:24 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பொதுமக்கள் தடுப்பூசி போடுவது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பு...

தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மக்கள் நல்வாழ்வுத்துறை
தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மக்கள் நல்வாழ்வுத்துறை

சென்னை: தமிழ்நாட்டிற்கு 54 லட்சத்து 85 ஆயிரத்து 720 தடுப்பூசிகள் வந்திருந்தாலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், பொதுமக்கள் என 39 லட்சத்து 44 ஆயிரத்து 5 பேர் மட்டுமே ஏப்ரல் 12ஆம் தேதி வரையில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

கரோனா தொற்று 2ஆவது அலை வேகமாக பரவிவரும் நிலையில், 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்றைத் தடுப்பதற்காக கோவக்சின், கோவிஷீல்டு எனும் இரண்டு தடுப்பூசிகள் ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது. முதலில் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கும், அதனைத்தொடர்ந்து முன்களப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டது.

அப்போது, பதிவு செய்தவர்களில் பெரும்பாலும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை. அதனைத்தொடர்ந்து, 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தற்போது தடுப்பூசிப் போடப்பட்டு வருகிறது. கரோனா 2வது அலையின் பரவல் வேகம் அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, நோய் தொற்றின் தாக்கத்தை குறைக்கும் வகையில், தடுப்பூசிப் போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறும்போது, “கரோனா தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதமாக இந்தியாவில் நமக்கு கிடைத்துள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி குறைவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி குறித்த அச்சம், பயம் மக்களிடம் உள்ளது. கரோனா தடுப்பூசியை அளிப்பதில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை தான் மக்களின் அச்சத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. எனவே தடுப்பூசி குறித்து தமிழ்நாடு அரசு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என கூறினார்.

தமிழ்நாட்டில் தடுப்பூசி போடுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறும்போது, “தமிழ்நாட்டில் தடுப்பூசி மருத்துவ முகாம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், துணை சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஏப்ரல் 12ஆம் தேதி வரையில், 39 லட்சத்து 44 ஆயிரத்து 5 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

45 வயதிற்கு மேற்பட்டவர்கள் விரும்பிவந்து தானக தடுப்பூசியை போட்டுக்கொள்கின்றனர். இது வரவேற்கதக்க மாற்றமாகும். மத்திய அரசு தடுப்பூசியை வழங்கி வருகிறது. தடுப்பூசியைப் போடுவதால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. தடுப்பூசிப் போட்டால் லேசான காய்ச்சல் ஏற்படும். தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, நுரையீரலில் பாதிப்பு உள்ளவர்கள் தடுப்பூசிப் போடாதவர்களாகத்தான் இருக்கின்றனர்.

தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மக்கள் நல்வாழ்வுத்துறை

முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்ட பின்னர், இரண்டு வாரங்கள் கழித்து பாதிக்கப்படுவர்கள் யாருக்கும் நுரையீரல் தொற்றில் பாதிப்பு வருவது கிடையாது. தடுப்பூசி போட்டவர்களுக்கு லேசானா கரோனா தொற்று வந்த செல்கிறது. தடுப்பூசியைப் போட்ட பின்னரும், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினால், கரோனா தொற்று வரவே வராது. மருத்துவக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், இணை நோய்கள் இருந்தாலும், பணியிலிருந்து ஒய்வு பெற்ற் பின்னர் வீட்டிலிருந்தாலும், தற்போது கிடைத்துள்ள அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கரோனா

Last Updated :Apr 13, 2021, 10:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details