தமிழ்நாடு

tamil nadu

கனமழை மீட்பு - உதவிக்கான வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 3:01 PM IST

Heavy rain in southern districts: தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான உதவிகள், பாதிப்புகள் குறித்து தமிழக அரசின் வாட்ஸ் அப் எண், டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

public may inform to government on WhatsApp and Twitter page about the need help and damages
உதவி மற்றும் பாதிப்புகளை தெரிவிக்க அரசு அறிவித்துள்ளது

சென்னை:திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை முதல் அதி கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களைத் தமிழ்நாடு அரசின் “வாட்ஸ்அப்” எண் மற்றும் “டிவிட்டர்”-ல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வேண்டுகோள்:குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதிக கனமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை அரசு பரிவுடன் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசித்துவரும் பொதுமக்களின் நலன் கருதி, மக்களுக்குத் தேவைப்படும் உதவிகள் அனைத்தையும் உடனுக்குடன் வழங்கிடக் களத்தில் அதிகாரிகள் ஆயத்தமாக உள்ளனர். எனவே, பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள பொது மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள், முதலான விவரங்களை சமூக வலைத்தளத்தின் (Social Media) மூலம் தமிழ்நாடு அரசின் வாட்ஸ் அப் எண்: 8148539914 மற்றும் “டிவிட்டர்” மூலமாகப் பதிவுகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  • வாட்ஸ் அப் எண்: 8148539914
  • டிவிட்டர்: Username - @tn_rescuerelief, @tnsdma
  • Facebook id : @tnsdma

இதையும் படிங்க: கோரம்பள்ளம் குளக்கரையில் உடைப்பு... வெள்ள அபாயத்தில் தூத்துக்குடி!

ABOUT THE AUTHOR

...view details