தமிழ்நாடு

tamil nadu

அலுவலகம் அமைத்து லாட்டரி விற்பனை - நடவடிக்கை எடுக்குமா போலீஸ்!

By

Published : May 25, 2023, 7:16 PM IST

ஆன்லைன் சூதாட்டம் தடை அமலில் இருக்கும் நிலையில் தற்போது ஆங்காங்கே சகல வசதிகளோடு அலுவலகம் அமைத்து லாட்டரி சீட்டுகள் விற்பனை படுஜோராக நடந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

அலுவலகம் அமைத்து லாட்டரி சீட்டுகள் விற்பனை

சென்னை:தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனையால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு லாட்டரி சூதாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது. இருந்த போதிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனையானது தொடர்ந்து களைகட்டி நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. கடந்த வாரம் போரூர், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக செய்திகள் வெளியான நிலையில் காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. வனிக வளாகத்தில் அலுவலகம் அமைத்து, கூகுள் பே (Google Pay), போன் பே (Phone pay) போன்ற சகல வசதிகளோடு, பிரிண்டிங் மிசின் வசதியோடு இங்கு லாட்டரி விற்பனையானது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக லக்கி டிரா என்ற லாட்டரி விற்பனை இங்கு களைக்கட்டுவதாகவும், காலை 11.30 மணி, மதியம் 2 மணி, மாலை 4 மணி, மற்றும் 6 மணி இரவு 7:30 மணி என 5 குலுக்கல் முடிவுகள் வெளியிடப்படுவதாகவும் அதனால் எப்பொழுதுமே கூட்டம் முண்டியடிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:Part time job Cheating: பார்ட் டைம் வேலை என டெலிகிராமில் மோசடி.. ரூ.45 லட்சம் பறிகொடுத்த அவலம்.. தூத்துக்குடியில் நடந்தது என்ன?

நாள் ஒன்றுற்கு 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரை கல்லா கட்டுவதாகவும், குறிப்பாக கூலி வேலைக்குச் செல்பவர்கள், ஆட்டோ ஒட்டுநர், கட்டட தொழிலாளர்கள், தினக் கூலிக்குச் செல்வபவர்கள், சிறு கடை நடத்தி வருவர்கள் என பலரும் இந்த 3 நம்பர், 4 நம்பர் லாட்டரி சீட்டுகளை வாங்குவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், பம்பர் பரிசாக 1 லட்சம் ரூபாய், 3 ஆம் எண்ணிற்கு 28 ஆயிரம் ரூபாய், 2 ஆம் எண்ணிற்கு ஆயிரம் ரூபாய், 1ஆம் எண்ணிற்கு 100 ரூபாய் என பரிசுகள் அறிவித்து ஆன்லைனில் முடிவுகள் வெளியிடப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதனால், எப்படியாவது பரிசுகளை வென்று விடலாம் என எண்ணும் மக்கள் லக்கி டிக்கெட்டை வாங்கிச் செல்கின்றனர்.

இந்த லக்கி லாட்டரிக்கு ஆசைப்பட்டு அதிகமானோர் தங்களது பணத்தை அதிகளவில் இழந்துவிட்டு செல்வதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் உடனடியாக தாம்பரம் காவல் துறையினர், உயர் அதிகாரிகள் தலையிட்டு கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மருத்துவமனையில் இருந்து காமுகன் தப்பியோட்டம்.. சென்னையில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details