தமிழ்நாடு

tamil nadu

ஊரக உள்ளாட்சித் தேர்தல் - மது விற்பனைக்கு தடை

By

Published : Sep 30, 2021, 1:54 PM IST

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மது விற்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

localbody-election
localbody-election

சென்னை :உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் மது விற்க தடை என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6, 9 ஆம் தேதிகளில், இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

ஏனைய 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் அக்டோபர் 9 ஆம் தேதி ஓரே கட்டமாகவும் நடைபெறவுள்ளது.

மதுவிற்பனைக்கு தடை

முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் அக்டோபர் 4ஆம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபர் 6ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும், இரண்டாம் கட்ட வாக்குபதிவு மற்றும் தற்செயல் தேர்தல்கள் நடைபெறும் பகுதிகளில் அக்டோபர் 7ஆம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபர் 9ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான அக்டோபர் 12ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், மேற்படி பகுதிகளுக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மதுக்கூடம் மற்றும் மதுபானக்கடைகள் திறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்குகள் எண்ணப்படும் பகுதிகளுக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும்,பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்வதோ அல்லது மதுக்கூடம் திறப்பதோ அல்லது அதனை இப்பகுதிகளில் எடுத்துச் செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது உரிய சட்டம் மற்றும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நெல்லையில் நள்ளிரவு சைக்கிளில் ரோந்து சென்ற எஸ்பி: காவலர்கள் உற்சாகம்

ABOUT THE AUTHOR

...view details