தமிழ்நாடு

tamil nadu

மின் கட்டணம் குறித்த கருத்துகேட்பு கூட்டம்

By

Published : Aug 23, 2022, 7:01 AM IST

சென்னையில் மின்கட்டணம் குறித்த கருத்து கேட்பு கூட்டம் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

மின் கட்டணம் குறித்த கருத்துகேட்பு கூட்டம்
மின் கட்டணம் குறித்த கருத்துகேட்பு கூட்டம்

சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் 2022 - 23 முதல் 2026 - 27 வரையிலான நிதியாண்டுகளுக்கு மின் கட்டணம், மின் செலுத்துதல் கட்டணம் மற்றும் மாநில மின்சுமை பகுப்பு கட்டணம் ஆகியவற்றை நிர்ணயிப்பது குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சந்திரசேகர், செயலாளர் வீரமணி ஆகியோர் தலைமை வகித்தனர்.

கூட்டத்தில் அரசியல் கட்சியினர், விவசாயிகள், பல தரப்பட்ட தொழில் நிறுவனத்தினர், சுயதொழில் முனைவோர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

இதையும் படிங்க :‘அண்ணாமலைக்கு புரிந்துகொள்கிற பக்குவம் இருக்க வேண்டும்’ - அமைச்சர் செந்தில் பாலாஜி

ABOUT THE AUTHOR

...view details