தமிழ்நாடு

tamil nadu

Ponniyin Selvan 2: பறை, செண்டை மேளம் முழங்க சோழர்களை வரவேற்ற ரசிகர்கள்!

By

Published : Apr 28, 2023, 2:28 PM IST

சென்னையில், பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் இன்று வெளியானதை திரையரங்குகளில் பறை, செண்டை மேளம் முழங்க ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

Etv Bharat
Etv Bharat

பறை, செண்டை மேளம் முழங்க சோழர்களை வரவேற்ற ரசிகர்கள்!

சென்னை: கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி படமாக எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் பாகம் 1, கடந்த ஆண்டு வெளியானது. இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய் ஆகியோர் நடித்திருந்தனர்.

இதனையடுத்து சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இதனை தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை வெற்றி, தாம்பரம் வித்யா ஆகிய திரையரங்குகளில் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் ஏராளமான ரசிகர்கள் முதல் காட்சி பார்ப்பதற்காக வருகைத் தந்திருந்தனர். அங்கு செண்டை மேளம், பறை இசை என உற்சாகமாக மேளதாளங்களுடன் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் ஜெயம் ரவி பேனர்களுக்கு பால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்ப்பதற்காக நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் வருகை தந்திருந்தனர். அப்போது ஜெயம் ரவிக்கு ரசிகர்கள் படை சூழ உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஏற்கனவே கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 1 மிகப் பெரும் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்தை காண ஏராளமான பொதுமக்கள் காலை முதலே பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்தை பார்ப்பதற்காக உற்சாகமாக திரையரங்கிற்கு வருகை புரிந்தனர்.

இதையும் படிங்க:Ponniyin Selvan 2: ஆரவாரத்துடன் வெளியானது பொன்னியின் செல்வன்-2; ரசிகர்கள் உற்சாகம்!

ABOUT THE AUTHOR

...view details