தமிழ்நாடு

tamil nadu

'பொங்கல் பரிசு பொருட்கள் தரமாக இருக்கும்' அமைச்சர் சக்கரபாணி

By

Published : Jan 4, 2023, 6:45 AM IST

Updated : Jan 4, 2023, 10:37 AM IST

தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்கள் தரமாக இருக்கும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சக்கரபாணி
அமைச்சர் சக்கரபாணி

சென்னை: கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் விநியோகம் தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று (ஜன.3) ஆய்வு மேற்கொண்டார். பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கவுள்ள அரிசி மற்றும் சர்க்கரையின் தரம் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். இந்நிகழ்வில் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 19 ஆயிரத்து 269 இலங்கை தமிழர்களுக்கும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படவுள்ளது. வரும் 9ஆம் தேதி முதலமைச்சர் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார் என தெரிவித்தார்.

பொங்கல் பரிசு அனைத்து மாவட்டங்களிலும் 60% பொருட்கள் சென்றுள்ளது என்றும் இரண்டு நாட்களில் 100% பொருட்கள் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு சேர்க்கப்படும். கடந்தாண்டு திருப்பத்தூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் தான் பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக புகார் வந்தது. அதற்கு உடனடி நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பொருட்கள் தரமாக இருக்கும்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கரோனா காலத்தில் நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாயை தேர்தல் வாக்குறுதி அளித்தபடி வழங்கினார். அதேபோல் தற்போது பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கம் வழங்கப்படுகிறது. கரும்பு கொள்முதல் செய்ய 17 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் ஒரு கரும்பின் விலை 33 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் 9 ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. 12 ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு பெறாத விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 13ஆம் தேதி பொங்கல் பரிசு வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:திரையரங்கில் வெளி உணவு கொண்டு செல்ல தடை - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Last Updated : Jan 4, 2023, 10:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details