தமிழ்நாடு

tamil nadu

பொங்கல் பரிசு: இன்று முதல் டோக்கன் விநியோகம்

By

Published : Jan 3, 2023, 9:37 AM IST

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க எந்த தேதியில் வர வேண்டும் என்ற விவரம் அடங்கிய டோக்கன், குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளில் இன்று முதல் வழங்கப்பட உள்ளது.

இன்று முதல் டோக்கன் விநியோகம்
இன்று முதல் டோக்கன் விநியோகம்

சென்னை: தமிழ்நாடு அரசு பொங்கலை முன்னிட்டு 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1,000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிட்டது.

அவற்றின் விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வரும் 9ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். அன்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.

அதை வாங்க ஒரே நேரத்தில் கூட்டமாக வரக்கூடாது என்பதற்காக எந்த தேதி, நேரத்திற்கு கடைக்கு வரவேண்டும் என்ற விவரம் அடங்கிய டோக்கன், குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளில் இன்று முதல் ரேஷன் ஊழியர்கள் வழங்க உள்ளனர்.

தலா ஒரு கடையில் தினமும், 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் வகையில், டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க: அண்ணாமலையால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. போலீஸில் புகார் அளிப்பேன்.. காயத்ரி ரகுராம் பகீர்..

ABOUT THE AUTHOR

...view details