தமிழ்நாடு

tamil nadu

பொங்கல் பண்டிகை: கோயம்பேடு சந்தையில் சிறப்பு கடைகள்!

By

Published : Jan 10, 2023, 7:44 PM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் வரும் 17-ஆம் தேதி வரை சென்னை கோயம்பேடு மார்கெட்டில் சிறப்பு சந்தை செயல்படவுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை:தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஜன.14-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடம் தோறும் கோயம்பேடு மார்கெட்டில் அங்காடி நிர்வாகம் சார்பாக சிறப்பு சந்தை 10 நாட்கள் அமைக்கப்படும். இந்த சிறப்பு சந்தை இன்று(ஜன.10) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சந்தையில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான கரும்பு, வாழைக் கன்று, வாழை இலை, மஞ்சள், இஞ்சி, மண்பானை உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

இந்த சிறப்பு சந்தை அமைப்பதற்காக அங்காடி நிர்வாகம் சார்பாக ஏலம் நடத்தப்படும். அதில் ஏற்கனவே அங்காடி நிர்வாகத்தில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு ஏல உரிமை வழங்கப்படும். கோயம்பேடு மார்கெட்டிற்கு பின்புறம் சுமார் 3 ஏக்கரில் சிறப்பு சந்தை நடத்துவதற்காக அங்காடி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சிறப்பு சந்தை இன்று தொடங்கப்பட்ட நிலையில் கரும்பு மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் அனைத்து விதமான காய்கறிகளும் வரும் என கூறப்படுகிறது. 20 கரும்பு இருக்கக்கூடிய கட்டு ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு சந்தை அமைக்கப்பட்டதன் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அவற்றை சரிசெய்வதற்காக அதிகளவில் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதையும் படிங்க: 400 'துணிவு' டிக்கெட்டுகள் திருட்டு.. காவல் நிலையத்தில் புகார்!

ABOUT THE AUTHOR

...view details