தமிழ்நாடு

tamil nadu

முரசொலி அலுவலக ஆவணங்களை வெளியிட திமுகவுக்கு பொன்னார் கோரிக்கை!

By

Published : Nov 10, 2019, 8:53 PM IST

சென்னை: முரசொலி அலுவலகம் தொடர்பான ஆவணங்களை திமுக வெளியிட வேண்டும் என்றும், அவ்வாறு வெளியிடவில்லையென்றால் தமிழ்நாடு அரசு சம்பந்தப்பட்ட துறையின் மூலம் அந்த நிலம் பஞ்சமி நிலமா எனபதைக் கண்டறியவேண்டும் எனவும் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

pon radhakrishnan

சென்னை தி.நகரில் அமைந்துள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் மத்தியமுன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘திமுக ஆட்சிக்கு வருவதை தமிழ்நாடு மக்கள் விரும்பவில்லை. தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் எந்தக்கட்சியும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்காது.

ஆனால் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என மத்திய அரசு நினைப்பதாக மு.க. ஸ்டாலின் சொல்லியிருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் சொல்லிவருகின்றன. அது குறித்து விளக்க வேண்டிய இடத்தில் திமுக தான் உள்ளது.

அதில் தயக்கம் உள்ளது என்றால் திமுகவின் மடியில் கனம் உள்ளது என்று தான் அர்த்தம். முரசொலி அலுவலக இட விவகாரம் தொடர்பாக முதலமைச்சர், சம்பந்தப்பட்ட துறையின் மூலம் கண்டறிய வேண்டும். பஞ்சமி நிலத்தை வைத்திருப்பதை விட பாவச்செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

திமுகவின் மடியில் கனம் உள்ளது - பொன். ராதாகிருஷ்ணன்

முரசொலி அலுவலகம் தொடர்பான ஆவணங்களை திமுக வெளியிட வேண்டும். முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பது தெரியவந்தால் அதனை மீட்டு பட்டியலின சகோதரர்களிடம் ஒப்படைக்கும் பணியில் பாஜகவும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் ஈடுபடும்’ என்றார்.

இதையும் படிங்க: 'திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என மத்திய அரசும் செயல்படுகிறது' - மு.க.ஸ்டாலின்

Intro:Body:பஞ்சமி நிலத்தை வைத்திருப்பதை விட பாவச்செயல் வேறெருதும் இருக்க முடியும் - பொன் ராதாகிருஷ்ணன்


சென்னை, தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.


அப்போது அவர் பேசுகையில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதை தமிழக மக்கள் விரும்பவில்லை, தமிழகம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் எந்த கட்சியும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்காது

ஆனால் மத்திய அரசு திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என நினைப்பதாக ஸ்டாலின் சொல்லியிருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்

ரஜினி சொல்வதை போல் தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது, தமிழ்நாட்டில் இருந்த மக்கள் செல்வாக்கை பெற்ற இரண்டு தலைவர்கள் இப்போது நம்மிடையே இல்லை,அதனால் தான் வெற்றிடம் இருக்கிறது என்று சொல்கிறோம்

திமுக உள்ளிட்ட கட்சிகள் தீர்ப்பை வரவேற்றுள்ளனர், திருமாவளவனும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை சில கருத்துக்களை சொல்லியிருக்கிறார்

அயோத்தி தீர்ப்பு உச்சம் தொட்ட தீர்ப்பு, நீதிமன்றம் வரலாற்றில் எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்ப்பு வந்துள்ளது

உள்ளாட்சி தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றிபெறும்

உள்ளாட்சி தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளோம்

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் சொல்லிவருகின்றன..அது குறித்து விளக்க வேண்டிய இடத்தில் திமுக தான் உள்ளது, அதில் தயக்கம் உள்ளது என்றால் மடியில் கனம் உள்ளது என்று அர்த்தம்

முரசொலி அலுவலக இடம் விவகாரம் தொடத்பாக
முதல்வர், சம்பந்தப்பட்ட துறையின் முலம் கண்டறிய வேண்டும்

பஞ்சமி நிலத்தை வைத்திருப்பதை விட பாவச்செயல் வேறெருதும் இருக்க முடியும்

முரசொலி அலுவகம் தொடர்பான ஆவணங்களை திமுக வெளியிட வேண்டும்,தவறினால் அரசு அதை மீட்க வேண்டும்,
இல்லையென்றால் அந்த
பஞ்சமி நிலத்தை மீட்டு தலித் சகோதரர்களிடம் ஒப்படைக்கும் பணியில் பாஜகவும் ,தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் ஈடுபடும்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details