தமிழ்நாடு

tamil nadu

தேர்தல் திருவிழா: பிரியாணி படையல்

By

Published : Apr 1, 2021, 9:29 PM IST

Updated : Apr 1, 2021, 10:09 PM IST

சென்னை: சட்டபேரவைத் தேர்தல் வேலைகளில் அரசியல் கட்சியினர் ஒருபுறம் பரபரப்பாக இருக்க, மறுபுறம் பிரியாணி கடைகளும் படு பிஸியாகியுள்ளன. அந்தளவிற்கு தேர்தல் காலத்திற்கும் பிரியாணிக்குமான தொடர்பு பிரிக்க முடியாதது.

sdfa
dasf

நான் எதிர்க்கட்சிகளை பார்த்து கேட்கிறேன். இங்கே கூடியிருக்கும் கூட்டம் ஏதோ, குவார்ட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் கூடிய கூட்டம் என்று நினைத்து விட்டீர்களா...?”

இப்படியான பேச்சுக்களை அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் நாம் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, மேற்கூறியவைகள் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு கொடுக்கப்படும்.

தேர்தல் களத்தில் பிரியாணி தவிர்க்க முடியாதது. கட்சியின் தலைவர் பரப்புரைக்கு வருகிறார் என்றால், மிகப்பெரிய அளவில் கூட்டத்தை கூட்டுவது அந்த வேட்பாளர் அல்லது மாவட்ட செயலாளரின் பொறுப்பு. அதற்காக கூட்டத்தினருக்கு தரப்படும் உறுதிமொழிகளில் ஒன்று பிரியாணி. சில சமயங்களில் அது கிடைக்கவில்லை என்றால் கூட்டத்தில் ரகளைகளும் ஏற்படும்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் நான்கு நாள்களில் நடக்கவிருப்பதால் பிரியாணி கடைகளும் படு சூடாக இயங்க ஆரம்பித்திருக்கின்றன. அரசியல் கட்சியினர் பிரியாணி கடைகளை அணுகி, பெரிய பெரிய ஆர்டர்கள் கொடுப்பதால் பிரியாணி கடைக்காரர்கள் கூடுதலாக பிரியாணி மாஸ்டர்கள், பணியாள்களை போட்டிருக்கிறார்கள்.

பொதுவாக மக்களுக்கு அரசியல்வாதிகள்தான் இலவசம் உள்ளிட்ட வாக்குறுதிகள் கொடுத்து ஈர்க்க முயல்வார்கள். ஆனால், அவர்களுக்கே “இரண்டு கிலோ பிரியாணி வாங்கினால் ஒரு கிலோ இலவசம் என பிரியாணி கடைக்காரர்கள் வாக்குறுதி அளித்து திகைக்க வைப்பார்கள்.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு நேரடியாக பிரியாணி விநியோகிக்க முடியாத சூழல் ஏற்பட்டால், பிரியாணி டோக்கனை கொடுத்து குறிப்பிட்ட கடையில் பெற்றுக்கொள்ள சொல்லும் கதையும் உண்டு.

பாஜக கட்சியின் ஊர்வலத்தில் பிரியாணி கடை அண்டா ஒன்று திருடுபோனது. இதனால் நெட்டிசன்களால் அக்கட்சி பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. அதேபோல் சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கொடுக்காமல் திமுக கட்சி பிரமுகர் ஒருவர் கடைக்காரரை அடித்த சம்பவமும், பணம் கொடுக்காமல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் சொல்லி மதக்கலவரத்தை உருவாக்குவேன் என பாஜக கட்சிக்காரர் மிரட்டியது என்று பிரியாணிக்கும், கட்சிகளுக்குமான பந்தம் தொடர்கிறது. அரசியல் கட்சிக்காரர்களைப் பொறுத்தவரை பிரியாணி என்பது அத்தியாவசியம்.

களைகட்டும் பிரியாணி கடை

கரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட லாக்டவுனால் பிரியாணி கடைகளும் மூடப்பட்டன. இதனால் கடைக்காரர்கள் மிகவும் சோர்ந்துபோய் இருந்தனர். படிப்படியாக லாக் டவுன் விலக்கப்பட்டு நிலைமை சரியானதும் மகிழ்ச்சியடைந்த அவர்கள், இப்போது தேர்தலும் நெருங்கிவிட்டதால் வியாபாரம் சூடு பிடித்துள்ளது என்கின்றனர் பிரியாணி கடை உரிமையாளர்கள்.

Last Updated : Apr 1, 2021, 10:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details