தமிழ்நாடு

tamil nadu

Operation missing Children: 24 மணி நேரத்தில் 27 குழந்தைகள் மீட்பு

By

Published : Jun 9, 2023, 8:43 AM IST

தமிழ்நாட்டில் காணாமல் போன குழந்தைகளை கண்டறியும் ஆபரேஷனில் கடந்த 24 மணி நேரத்தில் 27 குழந்தைகளை மீட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

Children missing
ஆபரேஷன் மிஸ்ஸிங் சில்ரன்

சென்னை: தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் குழந்தைகள் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு குழந்தைகள் காணாமல் போகின்றனர். அதாவது, பாலியல் வன்முறைக்கு பயந்து செல்லும் குழந்தைகள், பெற்றோர்களின் அரவணைப்பு இன்றி உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டி தப்பி வெளியே செல்லும் குழந்தைகள்,

இல்லையெனில் உடலுறுப்பு கடத்துவதற்கு அல்லது பெண் குழந்தைகளை விற்பதற்கு என கடத்தி செல்லப்படும் குழந்தைகள் என்று காரணம் எதுவாக வேண்டுமாலும் இருக்கலாம். ஆனால், தொலைந்து போன பிறகு கிடைக்காத அனைத்து குழந்தைகளுமே காணாமல் போன குழந்தைகளின் பட்டியலில்தான் சேர்க்கப்படுகின்றனர்.

ஆகையால், காணாமல் போன குழந்தைகளை கண்டறிவதற்காக "ஆபரேஷன் மிஸ்ஸிங் சில்ரன்" (operation missing children) என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட அனைத்து காவல் ஆணையர் மற்றும் எஸ்பிக்களுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன கண்டுபிடிக்கப்படாத வழக்குகளின் பட்டியல் தயாரித்து சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையின் கீழ் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்களின் உதவியுடன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஆகியோர் சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

மேலும், அனைத்து காவல் நிலையங்களில் உள்ள காவல் ஆய்வாளர்களும் இந்த சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நேற்றைய தினம் டிஜிபி சைலேந்திரபாபுவால் உத்தரவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அனைத்து போலீசாரும் தீவிரமாக செயல்பட்டு காணாமல் போன குழந்தைகளின் பட்டியலைத் தயார் செய்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு காவல் துறை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் 25 பெண் குழந்தைகள் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் என மொத்தம் 27 காணாமல் போன குழந்தைகளை மீட்டுள்ளதாகவும், அவ்வாறு மீட்ட குழந்தைகள் அவரவர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சிறப்பு நடவடிக்கையானது தொடரும் எனவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம்,18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டாலோ அல்லது பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டாலோ, பெற்றோருக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள் உள்ளிட்ட எவ்விதமான காரணமான இருந்தாலும் சரி, உடனடியாக குழந்தைகள் உதவி மையத்தை அணுகலாம்.

இது குழந்தைகளுக்காகவே 24 மணி நேரமும் செயல்படும் மையமாகும். அதாவது 1098 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டால் காவல் துறை உடனடியாக நடவடிக்கை மேற்கோள்ளும்.

இதையும் படிங்க: Operation Missing Children: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details