தமிழ்நாடு

tamil nadu

இளம்பெண்ணுடன் தனிமையிலிருந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர்: மிரட்டிப் பணம் பறித்த இருவர் கைது!

By

Published : Dec 3, 2020, 11:23 AM IST

சென்னை: கொடுங்கையூர் அருகே இளம்பெண்ணுடன் தனிமையிலிருந்த டாஸ்மாக் மேற்பார்வையாளரை மிரட்டி 20 ஆயிரம் ரூபாய் பறித்த செய்தியாளர் உள்பட இருவரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

டாஸ்மாக் மேற்பார்வையாளரை மிரட்டி பணம் பறித்த இருவர் கைது
டாஸ்மாக் மேற்பார்வையாளரை மிரட்டி பணம் பறித்த இருவர் கைது

சென்னை கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா காலனியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (45). இவரது மனைவி, குழந்தைகள் சொந்த ஊரான இளையான்குடியில் வசித்துவருகின்றனர். ஆரோக்கியசாமி கொடுங்கையூர் பகுதியிலுள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றிவருகிறார்.

ஆரோக்கியசாமியும், அதே பகுதியில் வசித்து வரக்கூடிய இளம்பெண் ஒருவரும் நெருங்கிப் பழகிவந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு ஆரோக்கியசாமி அந்த இளம்பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துவந்து தனிமையில் இருந்துள்ளார்.

அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்ட ஆரோக்கியசாமி கதவைத் திறந்தபோது உள்ளே நுழைந்த இரண்டு பேர் தாங்கள் பத்திரிகையாளர் எனக் கூறியுள்ளனர். பின்னர் இருவரும் ஆரோக்கியசாமியிடம் யார் இந்தப் பெண் எனக் கேட்டதுடன் இதைப் பத்திரிகையில் வெளியிடப் போவதாகவும் கூறி மிரட்டல்விடுத்தனர்.

மேலும், பத்திரிகையில் வெளியிடாமல் இருக்க 20 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்ததையடுத்து பயந்துபோன ஆரோக்கியசாமி 20 ஆயிரம் ரூபாயை அவர்களிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக் கொண்டு இருவரும் அங்கிருந்து சென்ற பின்னர் ஆரோக்கியசாமி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர், டாஸ்மாக் மேற்பார்வையாளரை மிரட்டி 20 ஆயிரம் ரூபாய் பறித்துச் சென்ற, தமிழ்தலைமுறை செய்தியாளரும், அகில இந்திய பத்திரிகையாளர் சங்க துணைச் செயலாளருமான அருண்குமார் (33), புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஷாம் (32) ஆகிய இருவரையும் கைதுசெய்தனர்.

மேலும், இவர்கள் இதுபோல் வேறு யாரையும் மிரட்டி பணம் பறித்துள்ளனரா என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: சிபிஐ அலுவலர்கள்போல் நடித்து பணம் பறிக்க முயற்சி: வழக்கறிஞர் உள்பட ஐவர் கைது

ABOUT THE AUTHOR

...view details