தமிழ்நாடு

tamil nadu

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 5:54 PM IST

khelo india youth games 2024: ஆராவது கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் துவங்கி வைக்க உள்ளார்.

நாளை பிரதமர் தொடக்கி வைக்கிறார்
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்

சென்னை:வரும்ஜன.19 முதல் ஜன.31 வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் 6 ஆவது கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதன் தொடக்க விழா சென்னை, ஜவஹா்லால் நேரு விளையாட்டு அரங்கில் நாளை (ஜன.19) நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ள இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மற்றும் தமிழக அமைச்சர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

இந்த கேலோ இந்தியா போட்டியானது, தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து, 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் 1600 க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்க உள்ளனர். மேலும் இதில் 1000 க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்த ஆண்டு 27 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் ஸ்குவாஷ் அறிமுக விளையாட்டாக இடம் பெறுகிறது. மேலும் இதில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக இடம்பெற உள்ளது. இந்த போட்டிக்காக தமிழக விளையாட்டு மேம்பாட்டு வாரியம் முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக கால்பந்து ரசிகர்களால் ‘மெரினா அரங்கம்’ என அழைக்கப்படும் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குருவாயூரில் மலையாள சூப்பர் ஸ்டார்ஸ் உடன் பிரதமர் மோடி!

கோவையில் கூடைப்பந்து:இதில், தடகளம், ஹாக்கி, கூடைப்பந்து உள்ளிட்ட 27 வகையான விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. கோவை மாவட்டத்தில் கூடைப்பந்து மற்றும் தாங்தா ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகள் பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடத்தப்படவுள்ளது. மேலும் ஜன.21 முதல் 25 ஆம் தேதி வரை கூடைப்பந்து போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில், சுமாா் 200 போ் பங்கேற்க உள்ளனா்.

மேலும் ஜன.28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தாங்தா போட்டி நடைபெறவிருக்கிறது. இதில், 150 விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா். இப்போட்டி நடைபெறும் உள்விளையாட்டு அரங்கம் தயாா் செய்யப்பட்டுள்ள நிலையில், போட்டியில் பங்கேற்கும் வீரா்கள், நடுவா்கள், ஊழியா்கள் தங்குவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து மதுரை மற்றும் திருச்சியிலும் பல விளையாட்டுகள் நடைபெற்ற உள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் முதல் கடற்கரை வரை அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: சென்னை - மலேசியா விமானத்தில் இயந்திர கோளாறு: விமானியின் துரித செயலால் 160 பேர் உயிர் தப்பினர்..!

ABOUT THE AUTHOR

...view details