தமிழ்நாடு

tamil nadu

கே.டி.ராகவன் மீது சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் புகார்

By

Published : Sep 9, 2021, 5:27 PM IST

ஆபாச காணொலி விவகாரத்தில் முன்னாள் பாஜக மாநில செயலாளர் கே.டி ராகவன் மீது சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

கே.டி.ராகவன் மீது புகார்
கே.டி.ராகவன் மீது புகார்

சென்னை: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ். இவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (செப்.9) புகார் ஒன்றை அளித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த சில நாள்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர் மதன் ரவிசந்திரன் என்பவர் தனது யூடியூப் சேனலில் கே.டி ராகவனின் ஆபாச காணொலி ஒன்றை வெளியிட்டார். அந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதேபோல் 15 தலைவர்களின் 60-க்கும் மேற்பட்ட ஆபாச காணொலி தன்னிடம் உள்ளன என மதன் ரவிசந்திரன் தெரிவித்துள்ளார். இந்துக்களை புண்படுத்தும் விதமாக காணொலி வெளியிட்டதாக கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த சுரேந்திரனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர், கே.டி ராகவன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவில்லை.

கே.டி.ராகவன் மீது புகார்

எனவே கே.டி.ராகவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த காணொலி உண்மையில்லை எனில் மதன் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மி: துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை முயற்சி

ABOUT THE AUTHOR

...view details