தமிழ்நாடு

tamil nadu

பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு - இன்று நள்ளிரவு முதல் அமல்

By

Published : Aug 13, 2021, 3:42 PM IST

பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு
பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியில் ரூ.3 குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் பெட்ரோல் விலை உயர்விற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

முதலமைச்சருடன் நிதி அமைச்சர்

வருவாயை அதிகரிக்க முயற்சி

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், "வருவாயை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பழனிவேல் தியாகராஜன்

டீசல் விலை குறைக்கப்படவில்லை

ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்படும் வகையில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. டீசல் உயர்தட்டு வாகனங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுவதால் அதன் மீதான வரி குறைக்கப்படவில்லை.

பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமல்

பெட்ரோல் மீதான வரி குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது" என்றார்.

இதையும் படிங்க:காவல் துறையில் புதிய பிரிவு தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details