தமிழ்நாடு

tamil nadu

’அரண்மனைகள் சுற்றுலாத்தலமாக மாற்றப்படும்’- அமைச்சர் எ.வ.வேலு

By

Published : Jul 3, 2021, 4:07 PM IST

தமிழ்நாட்டில் உள்ள கோட்டைகள், அரண்மனைகள் சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.

அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்களின் கோரிக்கை குறித்து துறை செயலாளர், அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது.

எம். சாண்ட் அனுமதி

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்,’கடந்த இரண்டு நாள்களுக்கு (ஜூன்.30) முன்னர் ஒப்பந்ததாரர்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் சில சீர்திருத்தங்கள் இல்லாமல் இந்தத் துறை செயல்பட்டு வருவதாகவும், அரசின் மதிப்பீட்டில் இத்துறையினை சீர் செய்ய முடியவில்லை எனவும் ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.

ஏறத்தாழ 22 அம்ச கோரிக்கைகளை ஒப்பந்ததாரர்கள் அரசிற்கு வைத்துள்ளனர். ஆற்று மணல் பயன்படுத்துவதற்கு சிரமமாக இருப்பதால், அதற்கு மாற்றாக எம்.சாண்ட் மணலை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டுமெனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகள்

அரசு ஒப்பந்த வேலைக்கு அமர்த்தப்படும் வாகனத்தின் வாடகையை ஏற்றித்தர வேண்டும்.

குடிநீர் குழாய், மின்சார வசதி உள்ளிட்டவற்றை சிரமமில்லாமல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்றித்தர ஒப்பந்ததாரர்கள் கோருகின்றனர்.

அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

இது குறித்து ஆய்வு செய்து, அதனை அறிக்கையாக முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்ற பிறகு, அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அவர் அறிவிப்பார்.

புதிய சாலைகள்

போக்குவரத்தை எளிதாக்கும் சாலைகளை அமைப்பதில் மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட சில சட்டங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றிய அரசு தலையிடாமல் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் அடிப்படையில்தான், நடவடிக்கை எடுக்கப்படும்.

சுற்றுலாத்தலமாக மாறும் அரண்மனைகள்

மாநகராட்சிக்கு சொந்தமான சில பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதை அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து, சாலைகள் சீரமைக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள கோட்டைகள், அரண்மனைகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு, அவற்றை முதலமைச்சரிடம் காட்டிவிட்டு, அதற்கான மதிப்பீடு செய்து சீரமைக்கப்பட்டு சுற்றுலாத் தலமாக மாற்றப்படும்’எனப் பேசி முடித்தார்.

இதையும் படிங்க: திருப்பதியைப் போல் திருவண்ணாமலை திருக்கோயில் மாறும் - அமைச்சர் எ.வ.வேலு

ABOUT THE AUTHOR

...view details