தமிழ்நாடு

tamil nadu

தொடையில் பிரஷ் வைத்து கமல் படத்தை வரைந்து ஓவியர்

By

Published : Nov 7, 2022, 11:02 AM IST

நடிகர் கமல் ஹாசன் பிறந்த நாளையொட்டி திருக்கோவிலூரை சேர்ந்த ஓவியர் தொடையில் பிரஷ் வைத்து அவரின் படத்தை வரைந்து அசத்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் செல்வம். நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும், விக்ரம் திரைப்படம் வெற்றியை கொண்டாடும் விதமாகவும் தனது தொடையில் பிரஷ் வைத்துபடி கமல் படத்தை வரைந்தார்.

நடிப்பில் இப்படியும் நடிக்க முடியுமா என நடித்துக் காட்டியவர் கமலஹாசன் . நடிக்க முடியாத காட்சிகளையும், கதாபாத்திரங்களையும் தனது கலை ஆர்வத்தால் நடித்து சாதனை படைத்த நடிகர் கமல்ஹாசன்.

தொடையில் பிரஷ் வைத்து கமல் படத்தை வரைந்து ஓவியர்

அவருடைய பாணியை பின்பற்றி ஓவியத்திலும் சாதனை படைக்கலாம் என கமல் பாணியிலயே ஓவியர் செல்வம் உட்கார்ந்து கொண்டு தனது தொடையில் பிரஷ் வைத்துக்கொண்டு அப்படியே கமல்ஹாசன் உருவத்தை 20 நிமிடங்களில் வரைந்து அசத்தி உள்ளார்.

இதையும் படிங்க :‘நாயகன் மீண்டும் வர்றான்’ - 35 வருடத்திற்கு பின் மணிரத்னத்துடன் இணையும் கமல் ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details