தமிழ்நாடு

tamil nadu

பள்ளிகளைத் திறக்க வேண்டும் - தனியார் பள்ளி சங்க நிர்வாகிகள் கோரிக்கை

By

Published : Jan 20, 2022, 7:17 PM IST

Updated : Jan 20, 2022, 8:16 PM IST

தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும் எனத் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க நிர்வாகிகள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் வருகின்ற ஜன.31ஆம் தேதி கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகளைத் திறக்க வேண்டும்
பள்ளிகளைத் திறக்க வேண்டும்

சென்னை:தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று (ஜன.19) ஒரே நாளில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஜன.31ஆம் தேதி வரை 1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இன்று (ஜன.20) தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க நிர்வாகிகள் சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதன் பின்னர் ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் அடிப்படை எழுத்துக்களையே மறக்கும் நிலைமையில் உள்ளனர். தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்கள் மனவருத்தம் அடைந்து தங்கள் கல்வியை இழந்து வருகின்றனர்.

பள்ளிகளைத் திறக்க வேண்டும்

மாவட்ட ஆட்சியர்களிடம் மனு

தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயாராக உள்ளனர். ஆனால் கரோனா தொற்றைக் காரணம் காட்டி பள்ளிகளைத் திறக்காமல் அரசு மூடி வைத்துள்ளது. தனியார் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் மிகவும் சிரமப்படுகிறோம்.

எனவே ஜனவரி 31ஆம் தேதி 38 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களைச் சந்தித்து பள்ளிகளைத் திறப்பதற்கு அனுமதிக்க வேண்டுமென மனு அளிக்க உள்ளோம்.

கரோனா தொற்று வேகமாகப் பரவி வந்தாலும், மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை.

பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்கள் பொது இடங்கள், வணிக வளாகங்கள், மால் போன்றவற்றிற்கு செல்கின்றனர். ஆனால் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் மிகவும் பாதுகாப்பாக கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளோடு பாடம் கற்பித்து வருகிறோம்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க ஏதுவாக அரசு பள்ளிகளைத் திறந்து நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும் எனத் தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டி மூலம் தெரிவித்து வருகிறோம்" அவர் கூறினார்.

இதையும் படிங்க: கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சிறுவனுக்கு ரூ.8 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய ஸ்டாலின்!

Last Updated : Jan 20, 2022, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details