தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 4.98 % பேர் மட்டுமே ஏழ்மையில் உள்ளனர் - அமைச்சர் சக்கரபாணி

By

Published : Jul 5, 2022, 4:33 PM IST

தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 4.98 % பேர் மட்டுமே ஏழ்மையில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பொது விநியோகத்திட்ட அங்காடிகளில் நடைபெறும் பரிவர்த்தனைகளில் 98% கைவிரல் ரேகை பதிவு மூலம் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 4.98 % பேர் மட்டுமே ஏழ்மையில் உள்ளனர் - அமைச்சர் சக்கரபாணி
தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 4.98 % பேர் மட்டுமே ஏழ்மையில் உள்ளனர் - அமைச்சர் சக்கரபாணி

சென்னை: இந்தியாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்த மாநாடு மத்திய வர்த்தகம், தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகங்கள் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அரசின் சார்பில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மைச் செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், “தமிழ்நாட்டிலுள்ள பொது விநியோகத்திட்ட அங்காடிகளில் நடைபெறும் பரிவர்த்தனைகளில் 98% கைவிரல் ரேகை பதிவு மூலம் நடைபெறுகிறது.

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்த மாநாடு

இதனால் உரிய குடும்ப அட்டைத்தாரர்கள் பயன் பெறுவது உறுதி செய்யப்படுகிறது. நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட பல்முனை வறுமைக்குறியீடு அறிக்கையில், தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 4.98 % மட்டுமே ஏழ்மையில் உள்ளனர். ஆனால், இந்தியா முழுமைக்கும் 25.01% பேர் ஏழைகளாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

பொது விநியோகத்திட்டம் மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருப்பது, இச்சாதனைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:பாலியல் பலாத்கார முயற்சி - இளம்பெண்ணை காப்பாற்றிய திருநங்கைகள்

ABOUT THE AUTHOR

...view details