தமிழ்நாடு

tamil nadu

Madras IIT: 3 மாதத்தில் 4 மாணவர்கள் தற்கொலை.. சென்னை ஐஐடியில் தொடரும் அவலம்!

By

Published : Apr 21, 2023, 7:54 PM IST

சென்னை ஐஐடி(Chennai IIT) வளாகத்தில் பி.டெக் இரண்டாம் ஆண்டு மாணவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூர்(Kolhapur) பகுதியை சேர்ந்தவர் ஷோக்லே கேதார் சுரேஷ்(21). இவர் சென்னை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஐஐடி காவேரி விடுதியில் தங்கி பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் மாணவன் கேதார் சுரேஷ்(Kedar Suresh) தான் தங்கியிருந்த காவேரி விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். உடன் தங்கியிருந்த மாணவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டூர்புரம் காவல் நிலைய போலீசார் உயிரிழந்த மாணவன் கேதார் சுரேஷின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மாணவன் காதல் தோல்வியால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும், மாணவன் கேதார் சுரேஷ் தனது சொந்த ஊரில் இளம்பெண் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்ததும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலர்களிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அந்த பெண் கேதாருடனான காதலை முறித்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மாணவன் கேதார் சுரேஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருப்பினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 4 ஐ.ஐ.டி மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீவன் சன்னி, ஆந்திராவை சேர்ந்த வைபு புஷ்பக் ஸ்ரீ சாய், மேற்கு வங்களாத்தை சேர்ந்த சச்சின்குமார் ஜெயின் தற்கொலையை தொடர்ந்து தற்போது கேதார் சுரேஷ் தற்கொலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 8 வயது சிறுவன் கழுத்து நெரித்துக் கொலை: நரபலியா? திடுக்கிடும் பின்னணி!

ABOUT THE AUTHOR

...view details