தமிழ்நாடு

tamil nadu

பள்ளிகள் விடுமுறையில் மாற்றம் - கூடுதலாக ஒரு நாள் விடுமுறை!

By

Published : Dec 30, 2019, 7:03 PM IST

சென்னை: அரையாண்டு விடுமுறைக்குப் பின் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் ஜனவரி 3ஆம் தேதி திறக்கப்படவிருந்த நிலையில், வாக்கு எண்ணும் பணி காரணமாக 4ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

school education deparment
school education deparment

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள் 3ஆம் தேதி திறக்கப்படவிருந்த நிலையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி நடைபெறவிருப்பதால் விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின்னர் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் வரும் ஜனவரி 4ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதாலும், ஒரு சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரையிலும் நடைபெற வாய்ப்புள்ளதாலும் பள்ளிகள் திறப்பதில் சிரமம் ஏற்படும் என ஆசிரியர் சங்கங்கள் இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் 3ஆம் தேதி திறப்பு!

Intro:அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் 4 ந் தேதி திறப்பு
Body:அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் 4 ந் தேதி திறப்பு


சென்னை: அரையாண்டு விடுமுறைக்குப் பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜனவரி 4 ந் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை டிசம்பர் 23 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டு பள்ளிகள் 3ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இந்தத் தேர்தலின் வாக்குப்பெட்டிகள் பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். ஒரு சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரையிலும் நடைபெறும் என்பதால் மறுநாள் பள்ளிகளை திறப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பள்ளி திறக்கும் தேதியை ஒரு நாள் தள்ளி வைக்க ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளதோடு மாநில தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் அளித்துள்ளனர். ஆனால், விடுமுறை அளிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறியிருந்தார்.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜனவரி 4 ந் தேதி திறக்கப்படும் என அறிவித்துள்ளார்.

ஏற்கனவே அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் 3 ந் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details