தமிழ்நாடு

tamil nadu

'மக்கள் மாற்று எரிபொருளுக்கு மாறவேண்டும்' - நிதின் கட்கரி அறிவுரை!

By

Published : Feb 16, 2021, 9:25 PM IST

சென்னை: பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்து வரக்கூடிய நிலையில், மக்கள் மாற்று எரிபொருளுக்கு மாறவேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவுரை வழங்கியுள்ளார்.

Nitin Gadkari
நிதின் கட்கரி

சென்னை அடையாறில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஃபாஸ்டேக் திட்டத்திற்கு அனைவரும் மாற வேண்டும். அதற்குக் கால நீட்டிப்பு நிச்சயமாக கிடையாது. பெங்களூரு மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் இந்த திட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுவார்.

மேலும், தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்கள் மற்றும் சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டம் குறித்து தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளேன் என்றார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி செய்தியாளர் சந்திப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு, இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தினால் பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க முடியும். மாட்டுச் சாணம் மூலம் பெயிண்ட் தயாரிக்கும் முறை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்கள் மாற்று எரிபொருளுக்கு மாற வேண்டும் என்பதே தன்னுடைய அறிவுரை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பிப்ரவரி இறுதி வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details