தமிழ்நாடு

tamil nadu

என்னுடைய ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்துக்குத்தான்: ஜூனியர் எம்.ஜி.ஆர்

By

Published : Jun 29, 2022, 8:12 PM IST

"என்னுடைய ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்துக்குத்தான். எனது பதவி பற்றி எனக்கு கவலை இல்லை'' என எம்.ஜி.ஆர் பேரனும் அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளருமான வி.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜூனியர் எம்.ஜி.ஆர்
ஜூனியர் எம்.ஜி.ஆர்

சென்னை:எம்.ஜி.ஆர் பேரனான வி.ராமச்சந்திரன் ராமபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுக தொண்டர்களின் ஆதரவு அதிக அளவு ஓ.பி.எஸ்க்கு தான் உள்ளது. திடீரென கட்சியில் குழப்பத்தை எற்படுத்தி, அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தான் சரி என எடப்பாடி கே பழனிச்சாமி கூறியது சரியல்ல என தெரிவித்த அவர், இ.பி.எஸ் ஏன் ஓ.பி.எஸ்ஸை அதிமுகவின் தலைவராக்க கூடாது என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர்,

"அதிமுக கட்சியை எம்.ஜி.ஆர் வேர்வை சிந்தி உருவாக்கினார். பிறகு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் காக்கப்பட்டு குழப்பமில்லாமல் நடத்தி வந்தார். மேலும் ஜெயலலிதா இருக்கும் காலத்திலேயே ஓ.பி. எஸ்ஸை நம்பி கட்சிப் பொறுப்பை கொடுத்தார். மேலும் ஓ.பி. எஸ்ஸும் அதற்கு விசுவாசமாக நடந்துகொண்டார்.

ஜூனியர் எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் வகுத்த விதிப்படி தொண்டர்களால் தேர்வு செய்படுபவர்களையே அ.தி.மு.க கட்சி ஏற்றுக்கொள்ளும். ஓ.பி. எஸ்சை கட்சியை விட்டு நீக்க முடியாது. அவர்தான் தான் எடப்பாடி பழனிசாமியை நீக்கமுடியும். மேலும் பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வத்தை அவமானப்படுத்தியது அராஜகமான செயல்", என தெரிவித்தார்.

இதையும் படிங்க:அதிமுகவின் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி முதலமைச்சருக்கு புகழேந்தி கடிதம்

ABOUT THE AUTHOR

...view details