தமிழ்நாடு

tamil nadu

இந்தியன் 2 வழக்கு - லைகா நிறுவனம், சங்கர் பேச்சுவார்த்தை

By

Published : Sep 2, 2021, 3:11 PM IST

இந்தியன் 2 பட பிரச்சினை தொடர்பாக லைகா நிறுவனமும், இயக்குநர் சங்கரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2 வழக்கு
இந்தியன் 2 வழக்கு

சென்னை:கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் தயாராகி வருகிறது. இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க சங்கருக்கு தடை விதிக்க கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து லைகா நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (செப்.2) விசாரணைக்கு வந்தது.

இந்தியன் 2 கமல்

4 வாரம் அவகாசம்

அப்போது, லைகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "லைகா மற்றும் சங்கர் தரப்பில் தனிபட்ட முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இதற்கு தீர்வு காணும் முயற்சியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனால் பேச்சுவார்த்தை முடிந்து தீர்வு காண்பதற்கு நான்கு வார கால அவகாசம் வழங்க வேண்டும்" எனத் தெரிவிக்கபட்டது.

இந்தியன் 2 படக் குழு

இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது உண்மை என்று சங்கர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை நான்கு வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: கருணாநிதியின் சிலை - சர்ச்சையும், கவிதையும்

ABOUT THE AUTHOR

...view details