தமிழ்நாடு

tamil nadu

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

By

Published : Feb 18, 2021, 11:04 PM IST

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை
போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை

சென்னை குரோம்பேட்டையில் அனைத்து போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சி.ஐ.டி.யு., தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட 67 தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியதாவது, "போக்குவரத்து தொழிலாளர்களுடன் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.

அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேட்டி

ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு உடனடியாக பாக்கித்தொகை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு 972 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் 1,093 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு 2,601 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. மீதித் தொகையும் விரைவில் வழங்கப்படும்" என்றார்.

இது குறித்து தொமுச தொழிற்சங்கத்தின் நடராஜன் தெரிவித்ததாவது, "பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த 17 மாதங்களைக் கடத்திவிட்டு தற்போது இரு தினங்களில் முதலமைச்சருடன் பேசி முடிவெடுப்பதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தொமுச தொழிற்சங்கத்தின் நடராஜன் பேட்டி

அதேபோல் கரோனா காலத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் தந்ததாக அமைச்சர் தெரிவித்தார். ஆனால் முழு ஊதியம் எங்களுக்கு வழங்கப்படவில்லை.

போக்குவரத்து தொழிலாளர்களின் உணர்வைப் புரிந்து கொண்டு வரும் 23ஆம் தேதிக்குள் அமைச்சர் நல்ல முடிவை எடுக்க வேண்டும். இல்லையென்றால் 23ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று திரண்டு அடுத்த வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பை வெளியிடுவோம்" என்றார்.

இதையும் படிங்க: இன்னும் 3 மாதத்தில் சென்னை - பெங்களூரு பசுமை சாலைப் பணி: நிதின் கட்கரி

ABOUT THE AUTHOR

...view details