தமிழ்நாடு

tamil nadu

'மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள முதலமைச்சருக்கு நன்றி’- ஸ்டாலின் ட்வீட்

By

Published : Aug 3, 2020, 1:16 PM IST

தேசிய கல்வி கொள்கையின் பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிப்பதாகக் கூறி அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.

அதில், “மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம் பெற்று இருந்தாலும் அம்மாவின் (அதிமுக) அரசு மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது.

இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர்.

தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்படும் போது அந்த பாதிப்பினைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்கும் அரசுதான், தமிழ்நாடு அரசு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

முதலமைச்சர் பழனிசாமியின் இந்த நிலைப்பாடுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது வெளியிட்ட பதிவில், “தேதிய கல்வி கொள்கையின் பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி.

மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம். அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: "மும்மொழி கொள்கைக்கு அனுமதி இல்லை"- தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

ABOUT THE AUTHOR

...view details