தமிழ்நாடு

tamil nadu

3 ஐபிஎஸ் அலுவலர்கள் இடமாற்றத்தை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்

By

Published : Dec 19, 2020, 8:32 PM IST

சென்னை: மேற்கு வங்கத்தில் மூன்று ஐபிஎஸ் அலுவலர்களை மத்திய அரசு பணி இடமாற்றம் செய்ததை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

MK Stalin
MK Stalin

மேற்கு வங்கத்தில் மூன்று ஐபிஎஸ் அலுவலர்களை மத்திய அரசு பணி இடமாற்றம் செய்துள்ள நிலையில், இந்த உத்தரவை பிரதமர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு பேஸ்புக் பதிவில், மேற்கு வங்கத்தில் பணியாற்றும் மூன்று ஐபிஎஸ் அலுவலர்களை மத்திய பாஜக அரசு ஒருதலைபட்சமாக இடமாற்றம் செய்திருப்பது எதேச்சதிகாரமானது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. டெல்லியில் உள்ள மத்திய அரசானது தம் விருப்பத்திற்கு ஏற்ப நாட்டின் குடிமைப்பணிகளில் ஆணையிடுதல் கூடாது. பிரதமர் இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்தாண்டு மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தை கைப்பற்ற வேண்டும் என பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. அந்த வகையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பரப்புரைக்காக மேற்கு வங்கம் சென்றிருந்தார். அப்போது, அவரின் வாகனம் உள்பட பாஜகவின் முக்கிய தலைவர்களின் கார் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சம்பவம் நடைபெறும்போது அங்கு பொறுப்பிலிருந்த எஸ்பி போலாநாத் பாண்டே, எடிஜி ராஜீவ் மிஸ்ரா, டிஐஜி பிரவீன் குமார் திரிபாதி ஆகியோரை இடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இதையும் படிங்க: ஜே.பி.நட்டா வாகனம் மீது தாக்குதல் - மேற்கு வங்க ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிடமாற்றம்

ABOUT THE AUTHOR

...view details