தமிழ்நாடு

tamil nadu

அபார்ட்மெண்ட்வாசிகளுக்கு நற்செய்தி.. மின்கட்டணத்தை குறைத்து அதிரடி அறிவிப்பு..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 5:21 PM IST

Updated : Oct 18, 2023, 7:02 PM IST

பத்து வீடுகள் அல்லது அதற்கும் குறைவான, 3 மாடிகளைக் கொண்ட அல்லது அதற்கும் குறைவான வீடுகளைக் கொண்ட மின்தூக்கி (லிஃப்ட்) வசதியில்லாத குடியிருப்புகளுக்கு, பொது பயன்பாட்டிற்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை 8 ரூபாயிலிருந்து 5 ரூபாய் 50 பைசாவாக குறைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Etv Bharat
மு க ஸ்டாலின் மின்கட்டணம் குறைப்பு

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.18) ஆலோசனை நடத்தினார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் உள்ள மாநில ஊராட்சி வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன அரங்கில் இக்கூட்டம் நடந்தது.

இதில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். குறிப்பாக, பொது பயன்பாட்டுக்கு செலுத்தப்பட வேண்டிய மின் கட்டணம் ஒரு யூனிட் 8 ரூபாயிலிருந்து 5 ரூபாய் 50 பைசாவாக குறையும்' என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

இந்த அறிவிப்பு என்பது பல்வேறு குடியிருப்பு நல சங்கம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், அக்கோரிக்கையை பரிசீலித்து பத்து வீடுகளுக்கும் குறைவாக 3 மாடிகளுக்கும் மிகாத மின் தூக்கி வசதி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இந்த புதிய சலுகை கட்டண முறை நடைமுறைப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், சென்னையை பொருத்தவரை பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் நிறைந்துள்ளன. அதிலும் மின் தூக்கிகள் இல்லாத சிறியவகை அடுக்குமாடி குடியிருப்புகள் சென்னையின் உட்பகுதியில் எண்ணிக்கையில் அதிகம். அதேபோல, சென்னையின் உட்பகுதி என்பதால் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கும் பல விதிமுறைகள் பின்பற்ற வேண்டியுள்ளது. இதனால், தொடர்ந்து குடியிருப்பு நலசங்கங்கள் தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கவே இந்த அறிவிப்பு என்பது தெரிவிக்கபட்டுள்ளது.

சென்னை மற்றம் சென்னையில் புறநகர் பகுதிகளில் சிறு அடுக்குமாடி அதிக எண்ணிக்கையில் இருக்கிறது. சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணம் முறையை மாற்றி அமைத்தபோது, இந்த குடியிருப்புகளின் பொது விளக்கு வசதிகள், நீர் இறைக்கும் மோட்டார்கள் போன்ற பொது பயன்பாட்டு பணிகளுக்கான மின் கட்டணங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கான கட்டண முறைக்கு மாற்றப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

அதனால், குடியிருப்போர் நல சங்கங்கள் தெரிவித்ததன் அடிப்படையில் இந்த குடியிருப்பில் வசிக்கக்கூடிய நடுத்தர மக்களை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்துடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மும்பை போதைப்பொருள் கடத்தல் மன்னன் சென்னையில் கைது - பின்னணி என்ன?

Last Updated : Oct 18, 2023, 7:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details