தமிழ்நாடு

tamil nadu

சாத்தான்குளம் விவகாரம்: முதலமைச்சருக்கு ஸ்டாலின் கேள்வி!

By

Published : Jun 30, 2020, 6:08 AM IST

சென்னை: சாத்தான்குளம் சிசிடிவி காட்சி வெளியானதைத்தொடர்ந்து, இரு அப்பாவிகளின் உயிர்பறித்த குற்றவாளிகளைப் பாதுகாக்க இன்னும் என்னென்ன செய்ய போகிறீர்கள் முதலமைச்சர் பழனிசாமி? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

mk-stalin
mk-stalin

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் கோவில்பட்டி கிளைச் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். பின்னர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்கள் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சியினரும், திரை பிரபலங்களும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில், "ஜெயராஜ் தகாத வார்த்தையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு வந்த பென்னிக்ஸும் காவல் துறையினரைத் தகாத வார்த்தையில் திட்டி கொலைமிரட்டல் விடுத்தார். பின்னர் தரையில் உருண்டுபுரண்டதில் தந்தை, மகனுக்கு ஊமைக்காயம் ஏற்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சூழலில் சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஜெயராஜை காவலர்கள் இழுத்துச் செல்வதும், அவரைப் பின்தொடர்ந்து அவரது மகன் பென்னிக்ஸ் காவலர்களை நோக்கி ஓடுவதும் போன்று பதிவாகியுள்ளது.

இதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் பழனிசாமியை விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில், "இரு அப்பாவிகளின் உயிர்பறித்த குற்றவாளிகளைப் பாதுகாக்க இன்னும் என்னென்ன செய்யப்போகிறீர்கள் முதலமைச்சர் பழனிசாமி? பதவியை தவறாகப் பயன்படுத்துபவர்களிடமிருந்து மக்களைக் காக்க வேண்டிய முதலமைச்சரே செயலற்று இருப்பது ஏன்? முதலமைச்சரின் பலவீனம் அதிர்ச்சியளிக்கிறது.

#JAYARAJANDBENNIX இருவரும் காயங்கள் ஏதுமின்றி காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதை சிசிடிவி காட்சிகளும், ஊடகங்களின் கோப்புகளும் உறுதிசெய்கின்றன. கொலையாளிகளை IPC 302-ன்கீழ் கைதுசெய்ய வேண்டும் என முதலமைச்சருக்கு நான் நினைவூட்ட வேண்டுமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க:சாத்தான்குளம் சிசிடிவி காட்சி: முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டவை பொய்!

ABOUT THE AUTHOR

...view details