தமிழ்நாடு

tamil nadu

"ஒரு வார்த்தை சென்னால் உடனே மாற இது ஜீபூம்பா மந்திரம் இல்லை" - அமைச்சர் சேகர்பாபு

By

Published : Jan 28, 2023, 1:18 PM IST

சென்னையை சிங்கப்பூராக முதலமைச்சர் நிச்சயம் மாற்றுவார். ஒரு வார்த்தை சொன்னால் ஜீபூம்பா மந்திரம்போல் உடனே நிறைவேறி விடாது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

"ஒரு வார்த்தை சென்னால் உடனே மாற இது ஜீபூம்பா மந்திரம் இல்லை":அமைச்சர் சேகர்பாபு
"ஒரு வார்த்தை சென்னால் உடனே மாற இது ஜீபூம்பா மந்திரம் இல்லை":அமைச்சர் சேகர்பாபு

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி திருவிக நகர் மண்டலம் ஓட்டேரி நல்லா கால்வாயில், ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் கொசு ஒழிப்பு பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, "சென்னை மாநகராட்சி சார்பில் கொசுக்களை ஒழிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 3,312 மாநகராட்சி ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீர் நிலைகளில் ஆரம்ப நிலையில் கொசு புழுக்கள் உருவாகக்கூடிய நிலையில் இருக்கும் பொழுதே கொசு மருந்துகளை தெளித்து அதை ஆரம்ப காலத்தில் அழிக்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் 412 கைத்த தெளிப்பான், 300 பேட்டரி மூலம் இயங்கும் கைத்தெளிப்பான்களும், 120 விசைத்தெளிப்பான்கள் மூலமும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தாண்டு சிஎஸ்ஆர் நிதி மூலம் 83 லட்சத்திற்கு 6 ட்ரோன் வழங்கப்பட்டது. இந்த ட்ரோன்கள் மூலம் 15 மீட்டர் வரை கொசு தெளிப்பான்களை தெளிக்க முடியும். மனிதர்கள் செல்ல முடியாத பகுதிகளில் இந்த பணிகள் மேற்கொள்ள உள்ளது" எனத் தெரிவித்தார்.

சென்னையில் 22 வயது பெண் கட்டடம் விழுந்து பலியானது குறித்த கேள்விக்கு, "சென்னை மாநகராட்சியிடம் அனுமதி வாங்கிவிட்டு தான் கட்டடத்தை இடித்தார்கள். ஆனால், வழி காட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை. அது தனியாருக்கு சொந்தமான இடம் நாங்கள் கொடுத்த நெறிமுறைகளை அவர்கள் பின்பற்றாமல் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

மாநகராட்சி சார்பில் இதுகுறித்து நேற்றே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அங்கு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியில் அனுமதி பெற்ற பின்பு தான் இது போன்ற கட்டடங்கள் இடிக்கப்படுகிறது. இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்" என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "28 கால்வாய்களில் முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் முழுமையாக தூர்வாரப்பட்டதால் தான் பெய்த மழைக்கு எங்கும் தண்ணீர் தேங்காத நிலை இருந்ததாகவும், மழையுடைய முழு தாக்கம் இல்லை என்று வந்த பிறகு தூர் வாரும் பணியை மாநகராட்சியும், நீர்வளத் துறையும் இணைந்து தொடங்க உள்ளது.

சென்னை முழுவதும் கால்வாய்களை தூர்வார 2,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும், கொசஸ்தலை ஆறு 677 கிமீ தூர் வார முடிவு செய்யப்பட்டு இதுவரை 350 கிமீ தூரத்திற்கு 331 கோடி செலவில் பணி நடைபெற்றுள்ளது எனத் தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையை சிங்கப்பூராக மாற்றுவார் என்று கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "ஒரு வார்த்தை சொன்ன உடனே அது உடனே நிறைவேறிவிடாது. மந்திரம் இல்லை ஜீபூம்பா என்று சொன்னால் வந்துவிடும் என்பதற்கு. 2 ஆண்டுகள் என்பது போதிய காலகட்டமல்ல. நிச்சயம் சென்னையை சிங்கப்பூர் ஆக முதலமைச்சர் ஆக்கி காட்டுவார்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஈவிகேஎஸ் இளங்கோவனை 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் - கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன்

ABOUT THE AUTHOR

...view details