தமிழ்நாடு

tamil nadu

ஜெ., பல்கலைக்கழகம் பெயரளவில் மட்டுமே தொடங்கப்பட்டது - பொன்முடி

By

Published : Jul 20, 2021, 7:38 PM IST

Updated : Jul 20, 2021, 8:37 PM IST

பழைய தாலுகா அலுவலகத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் பெயரளவில் மட்டுமே தொடங்கப்பட்டது எனத் தலைமைச் செயலகத்தில் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

பொன்முடி
பொன்முடி

சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட நான்கு மாவட்ட கல்லூரிகளை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடையே பேசினார்.

அப்போது அவர், “விழுப்புரம் மாவட்டத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தர் மட்டுமே நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான நிதியோ, நியமனங்களோ எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. பழைய தாலுகா அலுவலகத்தில், பெயரளவில் மட்டுமே பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை மாணவர் நலன்கருதி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைத்து, இணைப்புப் பல்கலைக்கழகமாக மாற்றப்படும். இதன்மூலமாக பல்கலைக்கழகம் சிறப்பாகச் செயல்பட வழி ஏற்படும்” என்றார்.

இதையும் படிங்க:ராகுலின் சமூக வலைதளப் பக்கத்தை ஹேக் செய்வதால் பாஜகவுக்கு லாபம் கிடையாது - குஷ்பு

Last Updated : Jul 20, 2021, 8:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details