தமிழ்நாடு

tamil nadu

கூட்டுறவுக்கு என தனிச் சட்டம் உள்ளது... அண்ணாமலையை சாடிய அமைச்சர் பெரியகருப்பன்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 11:01 AM IST

Updated : Nov 18, 2023, 6:50 AM IST

Minister Periyakaruppan: கூட்டுறவுக்கு என தனிச் சட்டம் உள்ளது, அதன் அடிப்படையில் பணி நியமனங்கள் ஒளிவுமறைவின்றி நடைபெற்று வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

Minister Periyakaruppan gave appointment orders to 32 people in chennai
அமைச்சர் பெரியகருப்பன் 32 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்

சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கூட்டுறவுத் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட சுருக்கெழுத்து தட்டச்சர்கள் (நிலை-3) மற்றும் தட்டச்சுப் பணியிடங்களுக்காக பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (நவ.16) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு, 32 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு தேர்வான 32 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டதாகவும், தமிழ்நாடு கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் படித்து வரும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என காலிப் பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர், தொழில் முனைவோர்களும் தமிழ்நாட்டை நோக்கி வருகை தருவதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல், ஏற்கனவே 5,500 காலிப் பணியிடங்களை நிரப்ப நான்கரை லட்சம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, மூன்றரை லட்சம் பேர் தேர்வெழுதியுள்ளதாகக் கூறிய அவர், அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டதாகவும், 36 மாவட்டங்களில் சிறப்பாக பணி நடைபெற்றுள்ளது எனவும் தெரிவித்தார்.

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை புரிதல் இல்லாமல் பேசுவதாக கூறிய அவர், கூட்டுறவுக்கு என தனிச் சட்டம் உள்ளது என்றும், அதன் அடிப்படையில் பணி நியமனங்கள் ஒளிவுமறைவின்றி நடைபெற்று வருவதோடு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்களும் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்றும் கூறினார்.

வெங்காய விலையை கட்டுப்படுத்த வெங்காயம் விற்பனையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்தார். பின், கூட்டுறவுத்துறை செயலி சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறிய அவர், 3 மாதத்தில் கூட்டுறவு செயலியை மேலும் வலிமைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க:கோவை ராகிங் விவகாரம்; 7 மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவு!

Last Updated : Nov 18, 2023, 6:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details