தமிழ்நாடு

tamil nadu

Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது பழிவாங்கும் நடவடிக்கை - மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!

By

Published : Jun 14, 2023, 9:58 PM IST

Updated : Jun 14, 2023, 10:41 PM IST

மத்தியில் ஆளும் பாஜக அரசு, டெல்லி, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் விசாரணை அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்தியது போல் தற்போது தமிழ்நாடு அரசிற்கு எதிராகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது பழிவாங்கும் நடவடிக்கை - மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
Etv Bharat

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது பழிவாங்கும் நடவடிக்கை என மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ஒரு தனி நபரின் அரசியல் பகையும், ஒரு கட்சியின் சித்தாந்த ரீதியான அரசியல் பகையும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் உச்சமாக மாறியிருக்கிறது. கொங்கு மண்டலத்திலாவது சற்று வாக்குகளை வாங்க முடியும் என பாஜக நம்பிக் கொண்டிருந்தது. அந்த நம்பிக்கையை முற்றாக சிதைத்தவர் அமைச்சர் செந்தில்பாலாஜி.

அண்ணாமலை தோல்விக்கு காரணம் செந்தில்பாலாஜி: கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பாஜகவில் யார் நின்றாலும் தமிழ்நாடு மக்கள் அவர்களை தோற்கடிப்பார்கள் என்ற சூழல் இருக்கும்போது தனது தோல்விக்கு காரணம் செந்தில் பாலாஜி என நினைத்து அவரை பழிவாங்கும் எண்ணத்தில் சுற்றிக்கொண்டிருந்தார் அண்ணமலை.

அண்ணாமலையின் அரசியல் தில்லு முல்லுகளை இன்ச் பை இன்சாக விமர்சித்து அம்பலப்படுத்தி வந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. ரபேல் வாட்ச் பில் (rafale watch bill) எங்கே? என்ற கேள்வியை செந்தில் பாலாஜி எழுப்பியதை அண்ணாமலை தனக்கு ஏற்பட்ட பெருத்த அவமானமாக கருதுகிறார்.

கடந்த மக்களவை தேர்தல், சட்டப்பேரவை தேர்தல், உள்ளாட்சித்தேர்தல், இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் பாஜக கூட்டணி தோல்விக்கு காரண கர்த்தாவாக களத்தில் பணியாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் வேட்கை பாஜகவுக்கு அதிகமானது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது, 'அமலாக்கத்துறை Busy ஆக உள்ளதாகவும் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை விரைவில் சோதனை செய்யும்' எனவும் குறிப்பிட்டிருந்தார்.

சமூக வளைதளத்தில் அவதூறு: மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வதற்கு முன்பு பாஜகவும் அதிமுகவும் அவர் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பியிருந்தார்கள், தற்போது அமலாக்கத்துறை கைது செய்திருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு, டெல்லி, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் விசாரணை அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளது தற்போது தமிழ்நாடு அரசிற்கு எதிராக பயன்படுத்த தொடங்கியிருக்கிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீது பாஜகவிற்கு ஏன் பயம்: 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக அதிகமாக மேற்கு மாவட்டத்தில் வெற்றி பெற்றது. பாஜகவும் 2 இடங்களில் வெற்றி பெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், கரூர் ஆகிய 5 மாநகராட்சிகளையும், 100-க்கும் மேற்பட்ட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அதிக இடங்களையும் கைப்பற்றி திமுக வெற்றி பெற்றது.

இதற்கு முழு காரணமாக மேற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தான் என்று கூறப்பட்டது. பாஜக அனைத்துத் தேர்தல்களிலும் மண்ணைக் கவ்வினாலும், கொங்கு நாடு என்று கனவு கண்டனர். ஆனால், அந்த கனவையும் செந்தில் பாலாஜி கலைத்து விட்டார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே கரூர் மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் வெற்றி பெற பெரிதும் காரணமாக இருந்தவர் செந்தில் பாலாஜி. 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கருர் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெரும் என்று சவால் விட்டு வெற்றியும் பெற வைத்தார்.

அதில் தோல்வியுற்றவர்களில் பாஜகவின் மாநிலத் தலைவர், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆகியோர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் செந்தில் பாலாஜி பணியாற்றினால் நோட்டாவை விடவும் நிலமை மோசமாகிவிடும் என்ற பயத்தில் இது போன்ற சோதனைகளை செய்து வருகின்றனர்" என குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க:Senthil Balaji: செந்தில் பாலாஜி கைதை எதிர்பார்த்து காத்திருந்த கோவை திமுகவினர்.. காரணம் என்ன?

Last Updated :Jun 14, 2023, 10:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details