தமிழ்நாடு

tamil nadu

அரசு மருத்துவமனைகளில் ரூ.918 கோடியில் 106 புதிய அறிவிப்புகள்!

By

Published : Apr 19, 2023, 10:12 AM IST

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூ.918 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ள உள்ள 106 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

Minister M Subramanian announced 106 new announcements to be carried out in government hospitals at a cost of Rs 918 crore
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு மருத்துவமனைகளில் 918 கோடி ரூபாயில் மேற்கொள்ளபட உள்ள 106 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடந்த மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவத்துறைக்கு ரூ.918 கோடியில் 106 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை,

  • பாதுகாப்பான தாய் சேய் நல சேவைகளை மேம்படுத்திட மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உள்ளடங்கிய 553 கிராஷ் கார்ட் (Crash Cart), பச்சிளங் குழந்தைகள் சிகிச்சைக்கான 16 வென்டிலேட்டர் கருவிகள் (Neonatal Ventilator), 6 உயர்ரக அதிநவீன வென்டிலேட்டர் (High Frequency Oscillatory Neonatal Ventilator) கருவிகள் மற்றும் 150 ஆக்ஸிஜன் பிளெண்டர் (Oxygen Blender) கருவிகள் ரூபாய் 6.56 கோடி செலவில் வழங்கப்படும்.
  • மதுரை அரசு இராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன சிறுநீரக கல் அகற்றும் மருத்துவ உபகரணம் ரூபாய் 3.50 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
  • அரசு மருத்துவமனைகளில் 50 இரத்த சுத்திகரிப்பு (Dialysis) உபகரணங்கள் ரூபாய் 3.25 கோடி செலவில் நிறுவப்படும்.
  • “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் கீழ் சுய இரத்த சுத்திகரிப்புக்கான CAPD Bags ரூபாய் 3.01 கோடி செலவில் கூடுதலாக வழங்கப்படும்.
  • சென்னை “எழும்பூர் - மண்டல கண் மருத்துவவியல் நிலையத்திற்கு” ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.
  • மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் ஹீமோகுளோபினோபதி நோய் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலும், ஹீமோகுளோபினோபதி நோய்க்கான உயிர் காக்கும் உயர் ரக மருந்துகள் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
  • காசநோய் பரிசோதனைக்கான நுகர்பொருட்கள் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் வழங்கி, அனைத்து வட்டார அளவிலும் ஒருங்கிணைந்த காசநோய் சேவைகள் வழங்கப்படும்.
  • திருநெல்வேலி, தஞ்சாவூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தருமபுரி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பொள்ளாச்சி, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், பெரம்பலூர், கும்பகோணம், தென்காசி மற்றும் கோவில்பட்டி ஆகிய 8 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் சிகிச்சைப்பெற கட்டணப் படுக்கைகள் (Pay Ward) அமைக்கப்படும்.
  • சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய மூன்று மாவட்ட உணவுப் பகுப்பாய்வு ஆய்வகங்களில் நுண்ணுயிரியல் பிரிவு ரூபாய் 18 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
  • கோயம்புத்தூர், சேலம், தஞ்சாவூர், மதுரை மற்றும் பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் ரூபாய் 8.85 கோடி செலவில் ஐந்து உணவுப் பகுப்பாய்வு ஆய்வகங்களின் இரசாயனப் பிரிவு மேம்படுத்தப்படும்.
  • “தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம்” மூலம் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த 4133 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவர்.
  • சேலம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் நவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய முழு உடல் பரிசோதனை மையம் அமைக்கப்படும்.
  • 13 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மகப்பேறு தீவிர சிகிச்சை பிரிவுகள் ரூபாய் 6.88 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
  • 40 அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் கட்டடங்கள் ரூபாய் 24 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டிலான புதிய சி.டி ஸ்கேன் (CT Scan) கருவி வழங்கப்படும்.
  • அத்தியாவசிய மற்றும் சிறப்பு மருந்துகளுக்கு ரூபாய் 25 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • அனைத்து அரசு மருத்துவ மையங்களில் ஆய்வக சேவைகள் ரூபாய் 185.24 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • 50 வட்டாரங்களில் வட்டார பொது சுகாதார அலகுகளுக்கான புதிய கட்டடங்கள் ரூபாய் 40.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • மாரடைப்பினால் ஏற்படும் உயிரிழப்பினை தடுக்கும் பொருட்டு இருதய பாதுகாப்பு மருந்துகள் ரூபாய் 3.37 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
  • 29 அரசு மருத்துவமனைகளுக்கு புதிய கட்டடங்கள் ரூபாய் 161.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனைக்கு ரூபாய் 146.52 கோடி மதிப்பீட்டில் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.
  • சென்னை – அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 64.90 கோடி மதிப்பீட்டில் புதிய மாணவியர் விடுதி கட்டப்படும்.
  • 52 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் கட்டடங்கள் ரூபாய் 62.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • சென்னை - எழும்பூர், அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பன்னோக்கு உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டடம் ரூபாய் 53 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • 136 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் ரூபாய் 49.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செவிலியர் பயிற்சிப்பள்ளி கட்டடம் ரூபாய் 35.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புதிய ”எம்.ஆர்.ஐ. ஸ்கேன்” (MRI) ரூபாய் 17 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
  • கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன மருத்துவ உபகரணங்களுடன் உள்கட்டமைப்பு வசதிகள் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனைக்கு அதிநவீன மருத்துவ உபகரணங்கள் ரூபாய் 32 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
  • புற்றுநோய் கீமோதெரபி மருந்துகளுக்கு கூடுதலாக ரூபாய் 10 கோடி வழங்கப்படும்.
  • 200 புதிய நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • செங்கம் அரசு மருத்துவமனையில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில், விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கான உபகரணங்களுடன் கூடிய கட்டடம் அமைக்கப்படும்.
  • 51 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் ரூபாய் 61.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • 108 அவசர கால ஊர்திகளின் சேவையை வலுப்படுத்த ரூபாய் 21.40 கோடி மதிப்பீட்டில் 62 புதிய அவசர கால ஊர்திகள் (BLS), 13 தாய் சேய் நல ஊர்திகள் (JSSK) மற்றும் நவீன மருத்துவ கருவிகள் (98 Transport Ventilator) வழங்கப்படும்.
  • 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூபாய் 8.80 கோடி மதிப்பீட்டில் நவீன நரம்பியல் அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் வழங்கப்படும்.
  • ஐந்து அரசு மருத்துவமனைகளில், 50 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (Critical Care Blocks) ரூபாய் 118.75 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு (Critical Care Block) ரூபாய் 40.05 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

மகத்தான மருத்துவக் கட்டமைப்பு

  • நான்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தலா 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு (Critical Care Block) ரூபாய் 95 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
  • அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அமைப்பினை வலுப்படுத்தும் வகையில் கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் உள்ள 2286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.10.17 கோடி மதிப்பீட்டில் CCTV கேமராக்கள் பொறுத்தப்படும்.
  • காசநோய் பரிசோதனைக்கான நுகர்வு பொருள்கள் ரூ.20 கோடி மதிப்பீட்டில் வழங்கி அனைத்து வட்டார அளவிலும் ஒருங்கிணைந்த காச நோய் சேவைகள் வழங்கப்படும்.
  • ஏழு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 8 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய கட்டண படுக்கைகள் அமைக்கப்படும்.
  • கொடைக்கானல் கந்தர்வகோட்டை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் உள்ள உடற்கூறாய்வு மையங்கள் ரூபாய் 10.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவி எலும்பு அறுவை திறன் ஆய்வகம் ரூபாய் 2.40 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
  • எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகள் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவிற்கு தேவையான அதிநவீன உபகரணங்கள் ரூபாய் 1.75 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
  • சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு ஆய்வகங்ளுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் தர சான்றிதழ் பெறுவதற்காக நவீன ஆய்வக உபகரணங்கள் மற்றும் ஆய்வக கட்டமைப்பு ரூபாய் 1.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு லேப்ரோஸ்கோபி, எலும்பு மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும் ரத்த சேமிப்பு அலகிற்கான உபகரணங்கள் ரூபாய் 1.58 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
  • தமிழ்நாட்டில் ரூபெல்லா தட்டம்மை நீக்குதல் என்ற இலக்கை 50 விழுக்காடு மாவட்டங்களில் நிறைவேற்றப்படும்.
  • அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தூய்மை பணியாளர்களின் பயன்பாட்டிற்கென தனி அறை அமைத்து தரப்படும்.
  • 100 இந்திய மருத்துவமுறை மருந்தங்கள் ரூபாய் 12.98 கோடி செலவில் ஆயுஷ் நல மையங்களாக தரம் உயர்த்தப்படும்.

இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் ரூ.230 கோடி மதிப்பில் புற்றுநோய் ஆய்வு மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details