தமிழ்நாடு

tamil nadu

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

By

Published : Jun 1, 2021, 2:32 PM IST

வேளாண் உற்பத்திப் பொருள்களை மக்களிடத்தில் கொண்டுசேர்ப்பதில் உள்ள இடர்ப்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேட்டறிந்தார்.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

சென்னை: எழிலகத்தில், வேளாண் விற்பனை துறைகள் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், விவசாயிகளின் விளைபொருள்கள் மக்களுக்கு எளிதாகக் கிடைக்கும் வண்ணமும், மேலும் விளைபொருள்களின் விலையைக் கட்டுக்குள் வைப்பது, விளை பொருள்கள் உரிய நேரத்தில் பொதுமக்களைச் சென்றடைய வழிவகைச் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதேசமயம், வேளாண் உற்பத்திப் பொருள்கள் மக்களிடத்தில் கொண்டுசேர்ப்பதில் உள்ள இடர்ப்பாடுகள் குறித்து அமைச்சர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில், வேளாண் உற்பத்தி ஆணையர், வேளாண்மைத் துறை அரசு செயலர் சி. சமயமூர்த்தி , வேளாண்மைத் துறை இயக்குநர் வி. தட்சிணாமூர்த்தி, வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநர் எம். அருணா, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை இயக்குநர் முரளிதரன், துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: பத்மசேஷாத்ரி பள்ளி முதல்வர், தாளாளர் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details