தமிழ்நாடு

tamil nadu

மதுரையில் ரூ.500 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம்; அமைச்சர் கே.என் நேரு பேரவையில் தகவல்

By

Published : Jan 11, 2023, 12:42 PM IST

Updated : Jan 11, 2023, 1:30 PM IST

சட்டபேரவை கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது மதுரை, திருமங்கலம் பகுதிகளில் ரூ.500 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

மதுரையில் 500 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்; அமைச்சர் கே.என் நேரு பேரவையில் தகவல்
மதுரையில் 500 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்; அமைச்சர் கே.என் நேரு பேரவையில் தகவல்

சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று (ஜனவரி 11) கேள்வி நேரத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களான ஆர்.பி உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் தங்கள் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுமா என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "மதுரை, திருமங்கலம் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்டுத்தப்பட உள்ளது. இதுவரை 21 கிலோமீட்டர் தொலைவிற்கு பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.291.37 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. புதிதாக ரூ.500 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை திட்ட பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்பந்ததாரர்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. ஏனென்றால் பள்ளம் தோண்டும் போது சில இடங்களில் பாறை வந்துவிட்டால் அந்த இடத்தில் பள்ளம் தோண்டுவது சிரமம் மற்றும் செலவு அதிகம் என்பதால் ஒப்பந்ததாரர்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்" என்றார்.

இதையும் படிங்க: ’எங்க தொகுதியில் அப்படி எதுவும் நடக்கவில்லையே’ - சபாநாயகர் கேள்வி

Last Updated :Jan 11, 2023, 1:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details