தமிழ்நாடு

tamil nadu

Haj Jatra: புனித ஹஜ் பயணம்; நேரில் சென்று வழியனுப்பிய அமைச்சர் மஸ்தான்!

By

Published : Jun 7, 2023, 3:14 PM IST

ஹஜ் புனித யாத்திரை பயணம் மேற்கொள்ளும் யாத்திரிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்னை விமான நிலையத்தில் இருந்து வழியனுப்பி வைத்தார்.

மடியில் கனமில்லை; வழியில் பயம் இல்லை; ஈபிஎஸ்க்கு வேறு செய்தி இல்லை அமைச்சர் மஸ்தான் பேட்டி
மடியில் கனமில்லை; வழியில் பயம் இல்லை; ஈபிஎஸ்க்கு வேறு செய்தி இல்லை அமைச்சர் மஸ்தான் பேட்டி

மடியில் கனமில்லை; வழியில் பயம் இல்லை; ஈபிஎஸ்க்கு வேறு செய்தி இல்லை அமைச்சர் மஸ்தான் பேட்டி

சென்னை:ஹஜ் புனித யாத்திரை பயணம் இன்று தொடங்குவதை அடுத்து, நேற்றில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் வரும் 29 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இஸ்லாமியர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த நேரத்தில் புனித ஹஜ் யாத்திரையாக சவுதி அரேபியாவிற்கு மதினா மெக்காவிற்கு செல்வார்கள்.

இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு, மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன. அதோடு அவர்கள் குறைந்த விமான கட்டணத்தில் பயணிக்க தனிச் சிறப்பு விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இதைப் போல் சென்னையில் இருந்து ஜெட்டா செல்லும் சிறப்பு விமானங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்தவர்களும் பயணிக்க உள்ளனர்.

இந்தச் சிறப்பு தனி விமானங்கள் இன்று முதல் வரும் 21 ஆம் தேதி வரையில் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். சென்னையில் இருந்து ஜெட்டா வழியாக, புனித ஸ்தலமான மக்கா மதினா செல்கின்றனர். இந்த விமானம் இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 11 மணி 20 நிமிடத்தில் ஜெட்டா புறப்படுகிறது.

இந்த விமானத்தில் 254 ஹஜ் யாத்திரிகர்கள் செல்கின்றனர். இதை அடுத்து இரண்டாவது விமானம் நாளை காலை 12 மணி 10 நிமிடத்தில் சென்னையில் இருந்து ஜெட்டா புறப்படுகிறது. அதில் 162 யாத்திரிகர்கள் செல்கின்றனர். இதில் முதற்கட்டமாக செல்லும் இஸ்லாமியர்களை சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் மற்றும் அயலாக்க தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழி அனுப்பி வைத்தார்.

இவர்கள் ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு வரும் ஜூலை முதல் வாரத்தில், இதை போல் தனிச் சிறப்பு விமானங்களில் சென்னை திரும்புகின்றனர். ஹஜ் யாத்திரை பயணம் இன்றிலிருந்து தொடங்குவதை அடுத்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை அடுத்து சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், “ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இணை மானியமாக 10 கோடி ரூபாய் தமிழக அரசு முதலமைச்சர் அறிவித்து உள்ளார்” என்று கூறினார். பின், கள்ளச் சாராயத்திற்கு உடந்தையாக செயல்படுவதாக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செஞ்சி மஸ்தான் மீது குற்றம் சாட்டிய நிலை பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு, “மடியில் கனமில்லை அதனால் வழியில் பயம் இல்லை, எதிர்க்கட்சித் தலைவருக்கு வேறு செய்தி இல்லை.

அதனால் இவ்வாறு குற்றம் சாட்டி உள்ளார். அதனைத் தொடர்ந்து பலமுறை அந்த தொகுதியில் வெற்றி பெற்று உள்ளேன். குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் மக்கள் என்னை ஆதரிக்கமாட்டார்கள். மேலும், குற்றம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். தவறு செய்தவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு சிறைக்கும் அனுப்பப்பட்டு உள்ளனர்” என்று கூறினார்.

இதையும் படிங்க:'கருணாநிதி' பெயர் வைக்க அவசர ஆலோசனை கூட்டம்.. திமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்.. சேலத்தில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details