தமிழ்நாடு

tamil nadu

"மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கு ஏற்ப பள்ளிகள்" - அமைச்சர் அன்பில் மகேஷ்

By

Published : Nov 14, 2022, 11:34 AM IST

பள்ளிகளை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அனைத்து பள்ளிகளையும் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்கு  ஏற்ப மாற்ற நடவடிக்கை
அனைத்து பள்ளிகளையும் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்கு ஏற்ப மாற்ற நடவடிக்கை

சென்னை:குழந்தைகள் தினத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினத்தை கொண்டாடி வருகிறோம். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு பிறந்தநாளையே அவர் குழந்தைகள் மேல் கொண்ட அன்பை கொண்டாடும் வகையில் கொண்டாடுகிறோம்.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாம் சில உறுதிமொழிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. பள்ளியில் படிக்கும் போது தான் குழந்தைகள் இந்த உலகை புரிந்து கொள்கின்றனர். தங்கள் வீட்டை தாண்டி உலகத்திற்குள் முதன்முதலாக நுழைகின்றனர். அந்த உலகில் ஆசிரியர்கள் சக குழந்தைகள் புதிதாக பாடநூல்கள் ஆகியவை இருக்கின்றன. மேலும் பள்ளிக்கூடம் என்கிற ஒரு கட்டடம் அவர்கள் மனதுக்கு மிக நெருக்கமான ஒன்றாக மாறுகிறது. அதிக நேரம் செலவழிப்பது பள்ளியில் தான்.

அனைத்து குழந்தைகளும் சமம் என்றும், அதில் ஜாதி மத பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பாகுபாடுகள் கூடாது என்றும், வீட்டில் பெற்றோரும் பள்ளியில் ஆசிரியர்களும் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். அதுபோலவே தான் சிறப்பு கவனம் பெற வேண்டிய குழந்தைகளும் நம் சக நண்பர்கள் என்கிற உணர்வையும் அவர்களுக்கு ஊட்டி வளர்க்க வேண்டும் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் இதில் சம பங்கு உண்டு.

அனைத்து பள்ளிகளையும் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட வேண்டிய நிலைமையில் இருக்கிறோம். படிப்படியாக அதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை செய்யும் என இந்த நாளில் உறுதி தருகிறேன்" என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:’குழந்தைகளைப் போற்றுவோம், எதிர்காலத்தை காப்போம்’ - முதலமைச்சர் வாழ்த்து...

ABOUT THE AUTHOR

...view details