தமிழ்நாடு

tamil nadu

மிக்ஜாம் புயல் எதிரொலி: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பொது விடுமுறை - அரசு அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 5:05 PM IST

மிக்ஜாம் புயல் எதிரொலியால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அரசு பொது விடுமுறை அறிவித்து உள்ளது. அத்தியாவசிய பணிகள் மற்றும் மக்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது.

mikjam-storm-general-holiday-announcement-for-four-districts
மிக்ஜாம் புயல் எதிரொலி:சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு!

சென்னை:தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (டிச. 2) நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது இன்று (டிச. 3) வடமேற்கு திசையில் நகர்ந்து காலை 05.30 மணி அளவில் மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலானது நாளை (டிச. 4) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பிறகு தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையில் உள்ள நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.

அதன்படி மழை நீர் தேங்கிய இடங்களில் உடனடியாக நீரை அப்புறபடுத்துதல், மின் தடை ஏற்பட்டால் அதனை சரி செய்வது உள்ளிட்ட பணிகளை துரிதமாக மேற்கொள்ள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் பொது மக்கள் கட்டுபாட்டு மையத்தை தொடர்பு கொள்ள இலவச தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை:புயல் எச்சரிக்கை காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 4ஆம் தேதி) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருவள்ளூரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் புயல் எச்சரிக்கை காரணமாக வரும் திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதேபோல காஞ்சிபுரம், சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற காரணங்களுக்காக யாரும் வெளியே வர வேண்டாம் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:தீவிர புயலாக மாறும் 'மிக்ஜாம்' - வானிலை ஆய்வு மையம் கொடுத்த உச்சபட்ச எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details