தமிழ்நாடு

tamil nadu

நடிகர் சிம்பு ரூ.1 கோடிக்கன உத்தரவாதத்தை செலுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 8:29 PM IST

Actor Silambarasan to furnish surety 1 crore: வேல்ஸ் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த நடிகர் சிலம்பரசனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிம்பு ரூ. 1 கோடி உத்தரவாதத்தை செலுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
நடிகர் சிம்பு ரூ. 1 கோடி உத்தரவாதத்தை செலுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை:வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தங்களது நிறுவனத்தின் தயாரிப்பதற்காக திட்டமிட்டபட்டிருந்த "கொரோனா குமார்" என்ற படத்தில் நடிப்பதாக நடிகர் சிலம்பரசனை ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிப்பதற்காக சிலம்பரசனுக்கு மொத்தம் 9.5 கோடி ரூபாய் சம்பளமாகப் பேசப்பட்ட நிலையில், முன்பணமாக 4.5 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முன்பணம் கடந்த 2021ஆம் ஆண்டு அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடிகர் சிலம்பரசன் பணத்தைப் பெற்றுக் கொண்டு படப்பிடிப்புக்கு வரவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், 'கொரோனா குமார்' படத்தை முடித்துக் கொடுக்காமல் மற்ற படங்களில் நடித்து வந்ததால் நடிகர் சிலம்பரசனின் மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று (ஆகஸ்ட் 29) விசாரணைக்கு வந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சிலம்பரசன் மற்றும் வேல்ஸ் நிறுவனம் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் நடிகர் சிலம்பரசன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஒரு கோடி ரூபாய் மட்டுமே சிலம்பரசனுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:Actress Varalakshmi: போதைப்பொருள் கடத்தல் என்ஐஏ சம்மனா? - நடிகை வரலட்சுமி விளக்கம் என்ன?

இந்த நிலையில், வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலம்பரசனுக்கு நான்கரை கோடி ரூபாய் கொடுத்ததாகவும், அதற்கான வரவு செலவு விபரங்களையும் தாக்கல் செய்துள்ளதாகவும், குறிப்பிட்ட தொகை ரொக்கமாக அளிக்கப்பட்டதாகவும் கூறினார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, ஒப்பந்தத்தில் உள்ளபடி ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தைச் செலுத்த சிலம்பரசனுக்கு நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். எனவே, செப்டம்பர் 19ஆம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தைச் செலுத்தவில்லை என்றால், மேல் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி கூறினார்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'கொரோனா குமார்' படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்து நடிகர் சிலம்பரசன் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில் ஜனவரி மாதம், பல காலம் கிடப்பில் கிடந்த 'கொரோனா குமார்' படத்தின் பணிகள் மீண்டும் தொடங்குகின்றன என தகவல் வெளியானது.

அது மட்டுமல்லாமல் நடிகர் சிம்பு, கொரோனா குமார் படத்திலிருந்து விலகிவிட்டதாகவும், சிம்புவிற்கு பதிலாக 'லவ் டுடே' புகழ் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளார் எனவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:முதியோர் இல்லத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் விஷால்!

ABOUT THE AUTHOR

...view details