தமிழ்நாடு

tamil nadu

மூன்றாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

By

Published : Sep 26, 2021, 10:35 AM IST

மூன்றாம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழ்நாட்டில், தொடங்கி நடைபெற்றுவருகிறது.

Mega Vaccination camp in Tamil Nadu
மூன்றாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

சென்னை:தமிழ்நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில், 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு வைக்கப்பட்ட நிலையில், 28.9 லட்சம் பேர் அன்றைய தினம் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து இரண்டாவது மாபெரும் தடுப்பூசி முகாம் கடந்த வாரம் ஞாயிறு அன்று நடத்தப்பட்டது. இதில், 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 16.4 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இந்நிலையில், மூன்றாவது மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதற்காக 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. 15 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 200 வார்டுகளில் 1,600 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 56 விழுக்காட்டினர் முதல் தவணை தடுப்பூசியையும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 17 விழுக்காட்டினரும் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:‘திங்கட்கிழமை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறாது’ - ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details