தமிழ்நாடு

tamil nadu

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பிற்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடக்கம்!

By

Published : Jul 14, 2023, 6:34 PM IST

Updated : Jul 14, 2023, 7:06 PM IST

அகில இந்திய இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 20ஆம் தேதி முதல் நடத்தப்படும் என்றும், மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில இட ஒதுக்கீட்டு தரவரிசைப்பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 16ஆம் தேதி வெளியிடுகிறார்.

mbbs-bds-counseling-starts-on-22nd-july-medical-counseling-board-annoucement
எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடக்கம்:

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு 40 ஆயிரத்து 193 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு நடைபெறும், கால அட்டவணையை தேசிய மாணவர் சேர்க்கைக்குழு வெளியிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மாநில ஒதுக்கீட்டிற்கான இடங்களில் ஜூலை 22ஆம் தேதி முதல் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் நடத்தப்பட உள்ளது. நடப்பாண்டில் மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கு போதுமான அளவில் கால அவகாசம் இல்லாததால், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் நாட்களிலேயே தமிழ்நாட்டில் மாநில இட ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

இவர்களுக்கான தரவரிசைப்பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரும் 16ஆம் தேதி வெளியிடுகிறார். இதனால் ஜூலை 22ஆம் தேதி முதல் மாணவர்களுக்கான கலந்தாய்வு துவக்கப்படும் எனவும், கலந்தாய்விற்கு தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் மாணவர்கள் அழைக்கப்படும் விவரத்தையும் வெளியிட உள்ளார்.

தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரியில் 5050 இடங்களும், கேகே நகர் இஎஸ்ஐசி மருத்துவமனையில் 150 இடங்களும், 2 பல் மருத்துவக்கல்லூரியில் 200 இடங்களும் உள்ளன.

இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.எஸ்சி நர்சிங் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு அட்டவணையை தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி முதல்சுற்றுக் கலந்தாய்விற்கு ஜூலை 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை பதிவு செய்யலாம்.

அதன்பிறகு ஜூலை 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையில் மாணவர்கள் விரும்பும் கல்லூரியைத் தேர்வு செய்யலாம். இதனையடுத்து கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாணவர்கள் விவரம் ஜூலை 29-ல் வெளியிடப்படும். மாணவர்கள் ஜூலை 31-ம் தேதி முதல் 4-ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2ம் சுற்றுக் கலந்தாய்விற்கு ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஆகஸ்ட் 14 வரை பதிவு செய்யலாம். ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையில் விரும்பும் கல்லூரியைத் தேர்வு செய்யலாம். கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவர்கள் விவரம் ஆகஸ்ட் 18-ல் வெளியிடப்படும். மாணவர்கள் ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் 28-ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும்.

3-ம் சுற்றுக் கலந்தாய்விற்கு ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை பதிவு செய்யலாம். மேலும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரையில் விரும்பும் கல்லூரியைத் தேர்வு செய்யலாம். கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவர்கள் விவரம் செப்டம்பர் 8-ல் வெளியிடப்படும். மாணவர்கள் செப்டம்பர் 10-ம் தேதி முதல் 18-ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். அதனைத் தொடர்ந்து ஸ்டே வேகன்சி கலந்தாய்வு நடைபெறுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :"மணிப்பூர் கலவரத்தை அடக்கிவிட்டு பின்னர் தமிழகத்தை பற்றி பேசுங்க" - பாஜகவை விளாசிய திமுக எம்.பி ஆ.ராசா!

Last Updated : Jul 14, 2023, 7:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details