தமிழ்நாடு

tamil nadu

வருகிற 4ஆம் தேதி மறைமுக மேயர் தேர்தல் - சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

By

Published : Mar 2, 2022, 9:40 PM IST

சென்னையில் உள்ள 200 மாமன்ற உறுப்பினர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார், தொடர்ந்து நான்காம் தேதி காலை மறைமுக மேயர் தேர்தல் நடைபெறும் என அவர் அறிவித்தார்.

வருகிற 4ஆம் தேதி மறைமுக மேயர் தேர்தல் - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
வருகிற 4ஆம் தேதி மறைமுக மேயர் தேர்தல் - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சென்னை:சென்னையில் கடந்த மாதம் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு பதவி ஏற்பு விழா சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பதவி பிரமானம் செய்து வைத்தார்.

சென்னை மாநகராட்சி மாமன்றத்தில்,

திமுக: 153
அதிமுக: 15
காங்கிரஸ்: 13
சுயேச்சை: 5
சிபிஎம்: 4
விசிக: 4
மதிமுக: 2
சிபிஐ: 1
பாஜக: 1
அமமுக: 1
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்:1

என மொத்தம் மாமன்றத்தில் மொத்தம் 102 பெண் உறுப்பினர்களும் , 98 ஆண் உறுப்பினர்களும் உள்ளனர். ஆண் மாமன்ற உறுப்பினர்களை விட பெண் மாமன்ற உறுப்பினர்கள் அதிகம் உள்ளனர். ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருப்பது இதுவே முதல் முறை. சரியாக காலை 10 மணிக்குத் தொடங்கிய பதவி ஏற்பு விழா மதியம் 1:03 மணிக்கு முடிவடைந்தது.

பதவியேற்பு விழாவிற்கு பிறகு வரும் 4ஆம் தேதி காலை 9:30 மணி அளவில் மேயர் மறைமுகத் தேர்தலும்; நண்பகல் 2:30 அளவில் துணை மேயர் மறைமுகத் தேர்தலும் நடைபெறும் என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பைனான்சியர் சுரேஷ் லால்வானிக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு

ABOUT THE AUTHOR

...view details